விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை உயர்த்துவதும் ஒரு முக்கிய அம்சமாகும். வேளாண் ஏற்றுமதி விரிவான சர்வதேச சந்தையை விவசாயிகள் அணுக உதவுவதுடன் அவர்களது வருமானத்தையும் அதிகரிக்கும். 2020ம் ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் உலகில் பாரதம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் தமிழகம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை, 2018 – 19ல் 8,163.70 கோடிக்கும் 2019 – 20ல் 7,522.56 கோடிக்கும், 2021ல் 9,701.49 கோடிக்கும் மேற்கொண்டுள்ளது.