விசித்திர தலாக்

பாரதத்தில் முத்தலாக் முறை 2019 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. உலகின் பல முஸ்லிம் நாடுகளில்கூட தலாக் முறை பின்பற்றப்படுவது இல்லை என்றாலும்கூட நமது பாரதத்தில் வாழும் பல முஸ்லிம் பழமைவாதிகள் அதனை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், இதெற்கெல்லாம் கூடவா தலாக்? என கேட்கும் வகையில் பல விசித்திர தலாக் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. அவ்வகையில், குஜராத் அஹமதாபாத்தில் பெண் ஒருவரது 5 வயது மகள் பசிக்காக பால், பிஸ்கட் கேட்டாள். அதே நேரத்தில் அவரது கணவனும் பால் கேட்டார். குழந்தைக்கு முதலில் பால் பிஸ்கெட் கொடுத்த அந்த பெண், பிறகு தனது கணவனுக்கு பால் கொண்டு சென்று கொடுத்தார். இதனால் கோபமடைந்த அவரது கணவன், தனது பெற்றோர், மனைவியின் உறவினர்கள் முன்னிலையில் அவருக்கு முத்தலாக் கொடுத்தார்.  இது குறித்து அந்த பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு அவரது கணவரும் மாமியாரும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.