“thínjt‹ f©f©l bjŒt«” : ghuâah®
பாரதம் ஆண்டுக்கு 3.1 கோடி டன் எல்.பி.ஜி எரிவாயுவை பயன்படுத்துகிறது. இதில் ஐந்தில், மூன்று பங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது. அதில் ஐந்தில் ஒரு பங்கு ஈரான் மூடி வைத்த ஆர்மஸ் நீரிணை வழியே வருகிறது. அங்கே பாரத தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க பாரத எண்ணெய்க் கப்பல்கள் தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றன.
தடையை எதிர்பார்த்து பாரத அரசு பல வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்க ஏற்பாடு செய்து விட்டது. நெருக்கடி ஏற்படுமானால் சமாளிப்பதற்காக அதிக விலை கொடுத்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அர்ஜென்டினா நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள ஏற்பாடு ஆகிவிட்டது. நாட்டுக்குள் வரும் எரிவாயுவிலும், வணிக உபயோகத்துக்கு கட்டுப்பாடு விதித்து வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை தந்துள்ளது பாரத அரசு. தமிழகம் போன்ற பகுதிகளில் வாடிக்கையாக மத்திய அரசை எதிர்க்கும் பொறுப்பற்ற அரசியல் குழுக்கள் வேண்டுமானால் பற்றாக்குறை என்பதாக பசப்பலாம். சில கட்சிகள் சொல்வது போல மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்பது நிஜம் அல்ல என்பது தான் களநிலவரம்.
நாட்டைக் காக்கும் ஆயுத விஷயத்தில் மற்ற நாடுகளை நம்பி இருக்கக் கூடாது என பாரதம் ராணுவ தளவாட கொள்முதலில் சுயசார்புக் கொள்கையை பின்பற்றுகிறது; எரிவாயு உற்பத்தியிலும் அதை கடைபிடிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று நடப்பு சர்வதேச போர் கள நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.
அது சரி, எரிவாயு உள்நாட்டு உற்பத்திக்கு என்ன வழி என்று யாராவது கேட்டால் விவரம் அறிந்தவர்கள் சிரிப்பார்கள். இன்று பாரதத்தில் 43.1 லட்சம் வீடுகளில் பயோகேஸ் எரிபொருளாக பயன்படுகிறது. நாட்டில் இன்று 207 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தியாகிறது; இதை 20 மடங்கு அதிகரிக்க கால்நடை வளம் மிக்க விவசாய பூமியான பாரதத்தில் அமோக வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பயோகேஸ் உற்பத்தி செய்வது மிக சுலபம். விவசாயக் கழிவுகள், பசுஞ்சாணம், வீடுகளில் சமையலறை / கழிப்பறை கழிவுகள், கரும்புச் சக்கை இவற்றை கொண்டு, உள்ளூர் கொத்தனார் கட்டித் தரும் பயோ கேஸ் ஆலையில் பயோகேஸ் தயாராகி விடுகிறது. அது மட்டுமல்ல, பயோ கேஸ் உற்பத்தி நிரந்தரமாக நடப்பது சாத்தியம். காரணம், இது பாரத பூமி. 2018ல் பாரத அரசு எல்.பி.ஜிக்கு மாற்றாக 5,000 பயோகேஸ் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதாக அறிவித்தது. தேசம் கோமாதாவை சரணடைந்தால் கோடி புண்ணியம்.