உலகப்போரின் அசாதாரணச் சூழல் மற்றும் பாரதத்தின் ராஜதந்திர உத்தி

உலகளாவிய கொரோனா காலகட்ட பதட்டங்களுக்குப் பிறகு, சமீப காலங்களில் இத்தனை நாட்களாக நடந்து வரும் உலகளாவிய மோதல்களான ரஷ்யாவின், உக்ரைன் ஆக்கிரமிப்பு, ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவற்றி டையேயான பதற்றங்கள் சிக்கலான உலக அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன. இத்தகைய சூழலில், பாரதம் தனது குடிமக்களைப் பாதுகாக்கவும், சமநிலையான ராஜதந்திர உறவுகளைத் தக்க வைக்கவும், தனது சமநிலையை வலுப்படுத்தவும் கவனம் செலுத்துகிறது.
பல்வேறு நாடுகளுடன் வலுவான ராஜதந்திர உறவுகளைத் தக்க வைக்கிறது. இதற்கு சமநிலையான வெளியுறவுக் கொள்கை, பொருளாதார ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி, கலாச்சார ராஜதந்திரம் ஆகியவை அடிப்படையாக உள்ளன. இத்தகைய முயற்சிகள் பாரத அரசால் வழிநடத்தப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல், வளர்ச்சியை ஊக்குவித்தல், உலகின் பல்வேறு நாடுகளுடன் பொருளாதாரக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பாரத அரசு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதிலும், சர்வதேச உறவுகளைத் தக்கவைப்பதிலும் கவனமாக நடுநிலைமை வகிக்கிறது.
ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற சர்வதேச மன்றங்களில் தீவிரமாக பாரதம் பங்கேற்கிறது. அங்கு பொருளாதார வளர்ச்சி, காலநிலை மாற்றம், சர்வதேச அமைதி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் முக்கியமான பங்களிக்கிறது.
வெளியுறவு அமைச்சகம், பாரதத்தின் பிற நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை நிர்வகிக்கும் முதன்மை அமைப்பாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்களின் நெட்வொர்க் மூலம், வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்பு கொண்டு, ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை செய்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்குகிறது.
‘ஆபரேஷன் சிந்து’ (2025) மூலம் ஈரான்-இஸ்ரேல் மோதலில் பாரதம், ஈரான் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் மோதல்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பாரத குடிமக்களை பாதுகாப்புடன் வெளியேற்றி அழைத்து வந்தது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 4,400க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பராதம், அண்டை நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய இணைப்புத் திட்டங்கள், மற்றும் வர்த்தக ரீதியான ஒத்துழைப்பு மூலம் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துகிறது. இதனால் பிராந்தியத்தில் வர்த்தகம், போக்குவரத்து, ஆற்றல் விநியோகம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துகின்றன. இத்தகைய ஒத்துழைப்பு பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, அண்டை நாடுகளிடையே நம்பிக்கையை பாரதம் அதிகரித்துக்கொள்கிறது.
பாரதத்தின் ராஜதந்திர அணுகுமுறையால், பல நாடுகளுடன் வலுவான உறவுகளைத் தக்கவைத்து, ஆக்கபூர்வமான வகைகளில் மோதல்கள் பெருகாமல் தவிர்க்கும் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றுகிறது. போர் அபாயத்தைக் குறைத்து, தேசிய பாதுகாப்பையும், சர்வதேச செல்வாக்கையும் வலுப்படுத்தி, பாரதத்தை உலகளவில் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணப்புக்கு ஏதுவான சூழல் உடைய அமைதியான நாடாக முன்னிறுத்துகிறது.
மற்ற நாடுகளுடன் நல்ல உறவுகளைத் தக்க வைப்பதன் முக்கிய நன்மை, நெருக்கடிகளின்போது அலுவல் ரீதியான ஆதரவு கிடைத்து, வலுவான ராஜதந்திர கூட்டாண்மைகள் கொண்ட நாடாக உலகின் வேகமாக வளரும், மாபெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக, பாரதம் முன்னேறி வருகிறது.
பாரதத்தின் மீதான உறுதி மிக்க நிதானமான போக்கும், அதன் நற்பெயரை சர்வதேச அளவில் பொறுப்பான உலக சக்தியாக உயர்த்தி இருக்கிறது. கடினமான சூழல்நிலைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பாரதத்தின் மீதான நம்பகத்தன்மை வலுவடைகின்றன. இந்த அணுகுமுறை வேறு நாடுகளிடமிருந்து ஆதரவைப் பெற உதவி, உலக அரசியலில் பாரதத்தை ஸ்திரப்படுத்தும் சக்தியாக நிலைநிறுத்துகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பாரத கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை ஈரான் அனுமதித்தது.
கொரோனாத் தொற்று நோய்களின் போது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 6.7 மில்லியனுக்கும் அதிகமான பாரத குடிமக்களை மீட்க மத்திய அரசு “வந்தே பாரத் மிஷன்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மே 2020ல் தொடங்கிய இந்த மாபெரும் நடவடிக்கையில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து பாரத மக்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஆயிரக்கணக்கான விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
“ஆபரேஷன் ராகத்” என்பது 2015 ஆம் ஆண்டு பாரத ஆயுதப் படைகளின் ஒரு பெரிய பணியாகும். இது போரினால் பாதிக்கப்பட்ட யேமனில் இருந்து 5,600 க்கும் மேற்பட்டவர்களை (4,640 பாரதியர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டினர் உட்பட) பாதுகாப்பாக வெளியேற்றியது.
நட்பின் மூலம் சாதித்த பாரதம்:
எரிபொருள் தட்டுப்பாடு என்பது, சமூக அமைதியை கெடுப்பதற்காகவே எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட வதந்தியே. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் கூட, பெட்ரோல் பங்குகளில் எந்தவித கூட்டமும் இல்லை. மத்திய அரசின் அதிகாரிகள் எந்த தட்டுப்பாடும் இல்லை என்பதை தெளிவாக பலமுறை கூறி உள்ளனர். இதை நம்பி மற்ற மாநிலங்களின் மக்கள் வாழும் போது, தமிழகத்தில் மட்டும் இவ்வளவு க்யூ வரிசை ஏற்பட அவசியமே இல்லை. எப்போதும் அமலில் இருக்கும் பாட்டிலில் பெட்ரோல் கிடையாது என்ற விதியை கூட மீறி, பெரிய கேன்களில் பெட்ரோல் வழங்கப்படுகிறது. இதுவும் ஒரு செயற்கையான உள்ளூர் தட்டுப்பாட்டை உருவாக்கும் முயற்சி என்று நாம் கூறலாம். இப்படி அரசே தூண்டும் கலவர சூழ்நிலையை உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது.
கடுமையாக போர் நடைபெறும் சூழலிலும், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் வழியாக நமது நாட்டின் கப்பல்கள் எரிவாயுவை நிரப்பி, நமது நாட்டிற்கு வந்து சேருகிறது இது மோடியின் ராஜதந்திரமான நடவடிக்கை ஆகும்.
அதேசமயம் இவற்றை நிர்வகிப்பதில் தமிழக அரசில் இருக்கும் பெரும் இடைவெளியை இச்சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. வதந்திகளை விரைவாக எதிர்க்காமல், தெளிவான தகவல்களை மக்களுக்கு அளிக்காவிட்டால், அவர்களது நம்பிக்கை குறைந்து தேவையற்ற பதற்றம் பரவலாம் என்பது கசப்பான உண்மை
வாழ்க பாரதம் ! வளர்க பாரதம் !