கொரோனா தொற்றுக்குப் பின்பு வல்லரசு நாடுகள் மத்தியில் முதல் இடத்தை யார் பிடிப்பது என்பதில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. உலகப் பொருளாதார லீக் டேபிள் ரிப்போர்ட் நடத்திய கருத்துக் கணிப்பில், டாலர் மதிப்பில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2028ல் சீனா முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது பிரிட்டன் கன்சல்டன்சியான செபிர் (Cebr) சீனா அமெரிக்காவை 2030ல் தான் முந்தும் எனக் கணித்துள்ளது. 2 வருடங்கள் தள்ளிப்போவது சீனாவிற்குப் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதேவேளையில் இந்நிறுவனம், 2023ம் ஆண்டுக்குள் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என கணித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் உலக நாடுகள் எப்படிப் பணவீக்கத்தையும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கப்போகிறது என்பதுதான் பெரிய சவால் எனவும் செபிர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.