வன்முறை கும்பலில் காவலர்

ஆந்திரப் பிரதேசம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள அத்மகூரில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்படுவதற்கு அப்பகுதி ஹிந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 8 ஜனவரி அன்று ஒரு முஸ்லிம் வன்முறை கும்பல் காவல் நிலையத்தைத் தாக்கியது. கற்களை வீசப்பட்டன, வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல காவலர்கள் பலத்த காயமடைந்தனர். கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ‘இந்த கலவரத்தை தீவிர இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ  திட்டமிட்டு செயல்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒன்பது பேர் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள்’ என தெரிவித்தார். இந்நிலையில், தெலுங்கு நாளிதழான ‘சூர்யா’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஆந்திரப் பிரதேச சிறப்புக் காவல் துறையின் தலைமைக் காவலர் ஷேக் அதாவுல்லாஹ் முஸ்லிம் கும்பலுடன் சேர்ந்து அத்மகூரில் உள்ள காவல் நிலையத்தைத் தாக்கினார். ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலக பணியில் இருக்க வேண்டிய அவர், அங்கு செல்லாமல் இந்த வன்முறையில் கலந்துகொண்டார். அதாவுல்லா விடுமுறையில் இருந்ததாக போலியான பதிவேடுகளை தயாரித்து அவரை காப்பாற்ற சில காவல்துறை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். சம்பவத்தன்று டிரோன் கேமரா எடுத்த வீடியோ இதை உறுதிப்படுத்துகிறது’ என தெரிவித்தது. இதனையடுத்து ஷேக் அதாவுல்லாவை ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.