ஒருகாலத்தில் ஆயுத இறக்குமதி நாடாக மட்டுமே இருந்த பாரதம் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நவீன ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை பாரதத்திலேயே கண்டுபிடித்து உற்பத்தி செய்து வாருவதுடன் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியுள்ளது. ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஏற்றுமதியில் கடந்த நிதியாண்டில் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்து பாரதம் புதிய சாதனை படைத்துள்ளது. இவற்றில் 70 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும், 30 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. இவை, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுயசார்பு பாரதம், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களின் கீழ், துப்பாக்கிகள் முதல் கப்பல், விமானங்கள் வரை உள் நாட்டில் தயாரிக்கப்பட்டு நமது ராணுவம் மிக வேகமாக சுதேசிமயமாகி வருவதுடன் அவற்றை ஏற்றுமதியும் செய்து வருவது நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளத்தக்கது.