யு.யு.லலித் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித் 74 நாட்களுக்கு மட்டுமே இந்தப் பதவியை வகிப்பார். அத்துடன் அவருக்கு 65 வயதாவதால் அவர் ஓய்வு பெறுவார். முன்னதாக நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பிரிவு உபச்சார விழாவில் பேசிய யு.யு.லலித், “என்.வி.ரமணா தனது பதவிக்காலத்தில் பல்வேறு புரட்சிகளை செய்துள்ளார். அவரது செயல்பாட்டை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர் விட்டுச் சென்ற புரட்சியால் அடுத்து அப்பதவிக்கும் வரும் என் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறியிருந்தார்.