யாரிடமும் வெறுப்பில்லை

ஸ்ரீராமனுக்கும் ராவணனுக்கும் இறுதிகட்ட யுத்தம் கடுமையாக நடந்தது. ராவணனும் தனது முழு சக்தியையும் திரட்டிப் போராடினான்.

ஆனால் ஸ்ரீராமன் எய்த பிரம்மாஸ்திரத்தை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அது ராவணனுடைய மார்பைத் துளைத்தது. மாபெரும் வீரனான ராவணன் உயிரற்று ரதத்திலிருந்து கீழே விழுந்தான்.

 

விபீஷணன் உயிரற்றுக் கிடக்கும் அண்ணனைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறான். அவனுக்கு ஸ்ரீராமன் ஆறுதல் சொல்கிறார். ராவணன்  வீரசொர்க்கம் தானே அடைந்தான். அதனால்

 

 

கவலைப்படாமல் அவனுக்கு செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளை செய்யச் சொல்கிறார். என்னதான் அண்ணனாக இருந்தாலும் கூட அவன் செய்த அக்கிரமச் செயலால் மனம் வெறுத்துப் போயிருந்ததால் உத்திரகிரியைகளைச் செய்ய விபீஷணனுக்கு விருப்பமில்லை.

அப்போது ஸ்ரீராமன், ராவணன் உயிர் நீத்தபின் அவன் மீதுள்ள பகை என்பது தீர்ந்துவிட்டது. ராவணனுக்கு இறுதிச்சடங்குகளை விரோதியாய் இருந்த நானே செய்யலாம். உன்னுடைய சகோதரன் எனக்கும் சகோதரன் தானே…” என்று சொல்லி,  நீ தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஸ்ரீராமன் ராவணனை எதிர்த்துப் போரிட்டது வெறுப்பினால் அல்ல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே. அதனால்தான் போரிடும்போது கூட ராவணன் மீது வெறுப்புணர்வு சிறிதும் அற்றவராக இருந்தார்.

 

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்