பரதன் பதில்கள்

 பரதனாரே… ‘மனித நேயம்’ பற்றி?        

– கே. குப்புசாமி, மதுரை 

கலைவாணர் மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருந்தார். ஏழை நண்பர் ஒருவர் தனது மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வந்தார். கலைவாணர் அவருக்குக் ஏதாவது உதவ நினைத்தார். அருகில் ஒரு வெள்ளி டம்ளர்  இருந்தது. தனது மனைவி   மதுரத்தை  ஏதோ ஒரு காரணம் சொல்லி வெளியே அனுப்பிவிட்டு அந்த வெள்ளி டம்ளரை எடுத்து அவரிடம் எனது சிறிய  உதவி,  வாழ்த்துகள்  என்று  கூறி  அனுப்பி  வைத்தாராம்.

 

லஞ்சம்  –  மாமூல்  என்ன  வேறுபாடு?        

– ம. வேணுகோபால், திருவள்ளூர் 

ஒரு  தடவை கொடுத்தால் லஞ்சம்; ஒவ்வொரு  தடவையும் கொடுப்பது மாமூல். இதில் வேடிக்கை, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று போர்டு வைத்துள்ளனர். யாருக்கும்  வெட்கமில்லை.

 

மனித  வாழ்க்கையின்  லட்சியம்  எது?        

– வே. அருள்முருகன், திருச்சி 

மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனதும் நிருபர்கள் அவரிடம் இப்போது உங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டது அல்லவா என்றனர். அதற்கு தேசாய், இந்த பதவி எனது வாழ்க்கையின் லட்சியம் இல்லை. ஆத்ம ஞானம் பெறுவதும் இறைவனை அடைவதும்தான் எனது லட்சியம்” என்று தெரிவித்தார். இது அனைவருக்கும் பொதுவானதுதானே!

 

குழந்தைகளுக்கு  ‘வாசிப்பு’  பழக்கத்தை  எப்படி  உண்டாக்குவது?        

– த. சாருமதி, கூடுவாஞ்சேரி 

உங்கள் குழந்தை பத்தாம் வகுப்பு வந்துவிட்டால் வாரம் ஒருநாள் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று  பத்திரிகைகளை படிக்கப் பழக்குங்கள். ‘ஙுணித ஞிச்ண ஙிடிண’ என்ற புத்தகம் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வந்துள்ளது. அதுபோன்று மாதம் ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக  கூட்டணியில் வை.கோ சேர்ந்துள்ளாரே?        

– எம். மரகதம், நாமக்கல் 

அவர் தாராளமாகச் சேரட்டும். ஆனால் அதற்கு அவர் சொல்லும் காரணம்தான் கோமாளித்தனமானது. ஹிந்துத்துவாவைத்  திணிக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த திமுகவை ஆதரிப்பதாகக் கூறுகிறார்.  உண்மை என்ன? 13 வருஷமா கட்சிக்காரனுக்கு பதவி இல்லை. அடுத்து  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே இடம் பிடிச்சாச்சு.

 

எது நல்ல புத்தகம்?        

– ச. சந்திரமௌலி, கோவை 

எது எழுதுகிறவனையும் உயர்த்தி, படிக்கிறவனையும் உயர்த்துகிறதோ அதுவே நல்ல புத்தகம்.

 

அயோத்தியில் ராமர் கோயில் எப்போது கட்டப்படும்?        

– கே. தினேஷ், ஈரோடு 

இப்போதும் அங்கு ராமர்கோயில் தான் உள்ளது. அது ஒரு சிறிய கொட்டகையில் உள்ளது. அதை மாற்றி அங்கு ஒரு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பவேண்டும். எப்போது  என்றால் அதுவும் இறைவனின் விருப்பப்படியே நடைபெறும். அவரது  கணக்கை  யார்  அறிவார்?