மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் அத்தி வரதர்

நகரேஷு காஞ்சி என்ற சொலவடைக்கேற்ப  காஞ்சி மாநகரமே கடந்த ஒரு மண்டல காலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. இவ்வளவு பெரிய வைபவத்தைக் கண்ணுற்ற கோடானு கோடி பேர்கள் பலரும் முணுமுணுத்த வாக்கியங்களில் ஒன்று: “ஆத்திகம் தழைக்கச் செய்வதில் தமிழகத்திற்கு நிகர் தமிழகமே”  என்பதுதான். நாத்திகம் பொய்த்துப் போனது என்பதை நாற்பத்து ஏழு நாட்கள் நடந்த அத்தி வரத வைபவம் நேரடியாகக் காட்டியுள்ளது என்பதுதான் உண்மை.     வைபவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது.  வைபவத்தில் ஒரு கோடி பக்தர்களுக்கு மேல்  தரிசனம் செய்துள்ளனர். இன்றிரவு அத்தி வரதரை அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்ய உள்ளனர். ஜூலை 1ல் துவங்கி சிறப்பாக நடைபெற்ற இப்பெரிய நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி, மாநில கோவெர்னேர்கள், வீ ஐ பிக்கள் , வெளிநாட்டினர்  என்று  ஜாதி மதம் பார்க்காமல் பலரும்  அத்தி வரதனை கண்டு மனதார பிரார்த்தித்தனர்.

சேவாபாரதியின் காஞ்சிபுர பிரமுக பிரகாஷ் கூறும் கருத்துக்கள் : ” ஒவ்வொரு நாளும் விதமான  மலர்  மற்றும் பட்டு ஆடைகளில் ராஜ அலங்காரத்தோடு  அலங்கார ப்ரியனாக  அத்தி வரதர் அருள்பாலித்தார். நேற்று ரோஜா நிற பட்டாடையில் எழுந்தருளினார். அத்தி வரதரை தரிசிக்க வெளியூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வந்து அவர் அருள் பெற்றுள்ளனர்.  கடைசி நாளான நேற்று பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. நேற்று மட்டும் சுமார்  3.50 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்திருந்தனர். எங்கள் நகரத்தில் எங்கு திரும்பினாலும் மனிதர்களின் ஓட்டம், நடை, “கோவிந்தா கோவிந்தா என்கின்ற முழக்கங்கள்.  தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் சுமார் ஒரு கோடியே 45 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின் தீபாராதனையுடன்   நடை சாற்றப்பட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கொருமுறை அத்தி வரதராஜ  அமிர்தசரஸ் குளத்திலிருந்து  வெளியே எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்வது வழக்கம்.  ,குளத்திலிருந்து அத்திவரதர்எழுந்தருளிய விபரங்கள் குறித்த கல்வெட்டு, அத்தி வரதரை வைக்க உள்ள மண்டபத்தின் கீழ் உள்ளது.  கல்வெட்டில் என்ன கூறியுள்ளது ? “சாலிவாஹனசகாப்தம் – 1860 ஈசவா வருஷம் ஆனி மாதம் 29 (12.-7-.1937) ஸ்ரீ அத்தி வரதர் வெளியில் எழுந்தருள பண்ணி 48 நாள் வஸந்தேரத்ஸவ மண்டபத்தில் ஆராதிக்கப்பட்டு ஆவணி மாதம், 13ம் தேதி மறுபடி இந்த நடவாபியில் எழுந்தருள பண்ணப் பட்டார்.” .  இவ்வாறு அக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

நீராழி மண்டபத்தில் அத்தி வரதர் வைக்கப்படும் இடத்தில் 2019ம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதாக குறிப்பிட்டு இன்று கல்வெட்டு வைக்கப்படுகிறது. இதேபோல் 1979 மற்றும் 1937ம் ஆண்டுகளில் அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற்றதாகவும் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வைபவம் 1937ம் ஆண்டில் மட்டும் எப்படி மாறியது என சந்தேகம்  பலருக்கு எழுந்தது.

விசாரித்தபோது கிட்டிய செய்தி: வரதராஜ பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைத்து 1939ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதனால் முன்கூட்டியே 1937ம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடத்தப்பட்டதாகவும் தான்.

குளத்திற்குள் அத்தி வரதர் வைக்கப்படும் முன் பொதுவாக  என்னென்ன விதிகள் மேற்கொள்வார்கள்:

அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் ஸ்தாபனம் செய்ய தேவையான பணிகள் நேற்று இர வு முதல் நடந்து வருகிறது.  அத்தி வரதர் வைக்கப்படும் இடம் துாய்மை செய்யப்பட்டுள்ளது. adhu. . ஸ்ரீ சுப்ரபாத சங்கீதமும், மங்கள வாத்தியங்க ளும்  முழங்க  அத்தி வரதர் இன்று காலை எழுந்தரு ளினார்  . தொடர்ந்து சிறப்பு பூஜைகள்  நடந்து வருகின்றன.  ஆறு கால  பூஜை அவருக்கு உண்டு. இட்லி, பொங்கல், தோசை உள்ளிட்ட பல  நிவேதனங்கள் அத்தி வரதருக்குப்  படைக்கப்படு கின்றன.

அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அருளாளன் சிலைக்கு எந்தவிதப் பாதிப்பு ம் ஏற்படாத வகையில் சிலைக்கு வாசனை திரவியங்கள் பூசப்படுகின்றன.  தவிர  வெட்டி வேர், பச்சை கற்பூரம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள்  சேர்த்து  தைலக்காப்பு அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடைபெறு ம்.

பூஜைகள் முடிந்தபின்னர் நள்ளீரவு வாக்கில் அத்தி வரதர் அனந்த சரஸ் குளத்தில் வேத மந்திரங்கள் முழங்க வைக்கப்படுகிறார். இன்று  மணிக்கொரு தடவை எண்ணைக்காப்பு நடைபெறும்.  மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மண்டபத்திலிருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் நீராவி மண்டபத்திற்கு அத்தி வரதரை எடுத்து சென்று ஸ்தாபனம் செய்யப்படும். மேற்கு திசையில் தலையும், கிழக்கு திசையில் சுவாமி பாதமும், இருக்கும்படி சயன கோலத்தில் அத்தி வரதர் ஸ்தாபனம் செய்யப்படுவார். ஸ்தாபனம் செய்யப்படும் இடத்தின் அகலம் சுமார் ஐந்து அடியும், நீளம் சுமார் பத்து அடியும் இருக்கும் எனத்தெரிகிறது. பன்னிரண்டு நாகாக்க கற்கள்  மந்திரங்கள் சொல்லப்பட்டு அடுக்கிவைக்கப்படும்.

 குடைகள் ஏந்தப்பட்டு, தாத்தா ச்சரியர்கள் பலரும் மந்திரங்கள் முழங்க, வெடிச்சத்தத்துடன் விழா நடைபெறும்.  பேழை எதுவும் இல்லாமல் அத்தி வரதர் மட்டுமே வைக்கப்படுவார்.  வரதரை ஸ்தாபனம் செய்யு ம் இடத்தை சுத்தமான தண்ணீரால் நிரப்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் காஞ்சிபுரத்தில் மழை கொட்டிய போதும், அத்திவரதரை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையில் அத்திரவதரை தரிசித்தனர்,” என்றார்.

2 thoughts on “மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் அத்தி வரதர்

  1. அருமை….அருமை…நேரில் காண இயலாத காட்சி…இங்கு அருமையாக பதிவிடப்பட்டது!

  2. அத்திவரதரும் காஞ்சிபுரமும்

    அத்திவரதரின் வைபவம் உண்மையிலே ஒரு இந்து மதத்தின் மறுமலர்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. அதுவும், தமிழ்நாடு மாநிலத்தில்- மதமாற்றம், இந்து மதத்வேஷம், இந்து மக்களின் கலாசாரத்தை இழிவாகப் பேசுதல்,கோவில்களை ஆக்கிரமிப்பு செய்தல்-போன்ற திராவிடக் கட்சிகளின் கூத்து தாண்டவம் ஆடும் நேரத்தில், இந்த வைபவம் மிக முக்கியமானது. தமிழும், ஆன்மீகமும் ஒன்றே. தமிழ் இல்லாமல் ஆன்மீகம் இல்லை. ஆன்மீகம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதே உண்மை. அதுவும் சைவமும், வைஷ்ணமும் தமிழில் இரு கண்கள் என்றால். உயர்வு நவிற்சி அணி ஆகாது.
    தமிழ் என்று சொன்னாலே நம் கண் முன் நிற்பது கோவில்களே. அதனால்தான், நம் முன்னோர்கள் கோவில் இல்லாத ஊரில் குடிபுக வேண்டாம் என்று சொன்னார்கள் போல் தெரிகிறது. தமிழ் வளர்ந்தது கோவில்களிலே தான். ஒவ்வொரு நூல்களும் , நம்முள் கடந்து இருக்கும் கடவுள் முன் சமர்ப்பிக்கப்பட்ட காவியங்களே. இறைவனின் கடாக்ஷம் நமது ஒவ்வொரு நூல்களிலும் –தேவாரம், திவ்யப்பிரபந்தம். அபிராமி அந்தாதி, திருப்புகழ். திருவிளையாடல் புராணம், கம்ப ராமாயணம், ஆதிசங்கரர் இயற்றிய சுப்ரமண்ய புஜங்கம்-போன்ற எண்ணற்ற பொக்கிஷங்கள் கோவிலில், கடவுளின் ஆசியுடன் படைக்கப்பட்டன. அத்தகைய புண்ணிய பூமியிலே, திராவிட இந்துமத எதிர்ப்பு தாண்டவம் ஆடும் நேரத்திலே, கோவில்களை சூறையாடும் சமயத்திலே, நமது சின்னங்களையும், நமது கோட்பாடுகளையும் அழிக்கும் நேரத்திலே அத்திவரதரின் வைபவம் ஒரு பெரிய புரட்சியை செய்துள்ளது என்று கூறலாம்.
    தினமும், குறைந்தது சராசரியாக ஒரு லக்ஷம் குடும்பங்கள் காஞ்சிமாநகர் வந்து தரிசனம் செய்து இருப்பார்கள். அத்திவரதர் ஏன் படுத்துக்கொண்டே இருக்கிறார்? எழுந்துக் கொள்ள முடியாதா என்று கிண்டல் அடித்த சூழ்நிலையில், அதை ஒரு பெரிய அறிவுக் கேள்வியாகக் கருதி ஒரு விவாதம் நடத்திய ஊடகங்களின் மத்தியில் . அத்திவரதரைக் காண மக்கள் வந்தார்கள் என்றால், அது இந்துமதத்தின் ஒரு பெரிய தொலைநோக்கே காரணம்.
    சில ஊடகங்கள் இந்த வைபவம் இந்து மதத்தை இணைத்து விடுமோ என்ற பயத்தில், சாதித்சண்டைகளைத் தூண்டி விளையாட ஆரம்பித்தது. ஒரு சில மதத்தினர் , இந்துவைக் கண்டால் முகத்தில் குத்துங்கள் என்று சொல்லிய சமயத்திலே இந்த வைபவம் ஒரு சரித்திரம் வாய்ந்தது. எப்போதும் போல், இந்துக்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள் என்பது ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம். அரசாங்கம் கூட இந்த வைபவத்தை தமிழ்நாட்டின் விழாவாக கொண்டாடவில்லை. இந்த விழாவிற்கும் , தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல், அரசியல் காரணத்திற்க்காக ஒதுங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டூ இருந்தது. இந்த வைபவம், தமிழ் கலாசாரத்தின், ஆன்மீகத்தின் ஆணி வேர் என்று சொல்லிக் கொள்ள வெட்கம் அடைந்த அரசாக நடந்து கொண்டது பெரும் வேதனைகள அளிக்கிறது.
    கூட்டம் வந்ததால், ஏதோ செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் அரசாங்கம் செயல் பட்டது , நாம் அனைவரும் தலை குனிய வேண்டியது. நம்மைப் போல்தான், இந்து மக்களாகிய நம்மை போல் தான் அரசாங்கமும் இருக்கும். நமது கலாசாரத்தில், நமது இறையாண்மையில் , நமது ஆன்மீகத்தில் நமக்கு எப்படி ஈடுபாடோ, அதே நிலையில் தான் அரசாங்கமும் ஈடுபாடு கொண்டு செயல் பட்டது. அரசர்களாலும், இறைவனாலும் காக்கப்பட்ட கோவில்கள், தமிழ், ஆன்மிகம் அனைத்தையும் காக்கும் விதத்திலே அரசாங்கம் செயல் பட்டதாகத் தெரியவில்லை. வீரமணி என்ன சொல்வாரோ, ஸ்டாலின் எங்கு போராட்டம் நடத்துவாரோ, திருமாவளவன் எந்த பிரச்சனை எழுப்புவாரோ என்று அரசியல் ரீதியாக நினைத்த அரசு, தமிழை காக்க தவறி விட்டது, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை ஊக்கிவிக்கும் ஒரு புனிதமான வேலையை புறக்கணித்து விட்டது. தமிழ் மொழியைப் பரப்ப ஒரு சந்தர்ப்பத்தை தவறி விட்டது. தமிழ்நாட்டையே ஒரு பெரும் புனிதத் தலமாக நாம் மக்களுக்கும், யாத்திரிகளுக்கும், ஏன் தமிழ் மக்களுக்கும் கூட (விளம்பரம் என்று சொல்ல விரும்ப வில்லை), அறியும்படி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து இருந்தால், காஞ்சிபுரம் மட்டும் ஒரு காசியைப் போலோ, ஒரு ராமேஸ்வரம் போன்று ஒரு உன்னத நிலையை நாடு முழுவதும் அறிந்த கொள்ள வாய்ப்பு. அதைத் தவற விட்டது அரசாங்கம்.
    காஞ்சிபுரம் பல ஆயிரம் வருடங்களாக கல்விக்கு பெயர் பெற்ற ஸ்தலம். இந்தியாவில் இருந்த ஏழு முக்கிய நகரங்களிலே காஞ்சிபுரம் ஒன்று என்று அறிய வேண்டும். காஞ்சிபுரத்தில் மட்டும், சுமார் நூறுக்கும் மேற்பட்ட புராதன சைவ, வைஷ்ணவ கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும், சராசரியாக ஆயிரம் வருடங்களுக்கு மேல் நமது ஆன்மீகத்தையும், கலாசாரத்தையும் நின்று பறைசாற்றிக் கொண்டு உள்ளது. அதை அரசாங்கம் இந்த வைபவம் சமயம் மக்களிடம் பிரபலம் செய்திருந்தால், காஞ்சிபுரம் ஒரு பெரிய ஆன்மீக ஸ்தலமாக ஒரு, இரண்டு வருடங்களிலே மாறக் கூடிய வாய்ப்பை இழந்து விட்டது.
    இந்த வைபவத்தை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். நெற்றியில், விபூதியும், கும்குமமும் அணியக்கூடாது என்று அரசாங்கம் நம் கலாசாரத்தின் மேன்மையை மறந்து ஆணை இட்டாலும், இந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒரு பெரும் புரட்சிகரமான நிகழ்ச்சி. யாரையும் மூக்கில் குத்தாமல், யாரும் நெற்றியில் கும்குமத்தை அழித்துக் கொள்ளாமல் அத்திவரதரைக் தரிசனம் செய்தார்கள் என்றால், அது ஒரு பெரிய நிகழ்ச்சி. அத்திவரதரைக் கிண்டல் செய்த ஒருவர், அடுத்த நாளே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார், அவரது குடும்பம் அத்திவரதரைக் காண வந்தது என்று , அத்திவரதர் வரலாறாக அமையும். தன்னை வசைபாடியவர்களின் குடும்பத்தையும் காத்தார் அத்திவரதர் என்று யாராவது ஒருவர் எழுதுவார்கள். தன் நெற்றியில் இருந்த கும்குமத்தை அழித்த ஒரு இந்துமதத்தை எதிர்க்கும் வெறியனின் மனைவி அத்திவரதரை தரிசனம் செய்தார் என்று நாற்பது வருடம் கழித்து யாராவது ஒருவர் எழுதுவார்கள். இந்து மதத்தை கிண்டலடித்த பலர், இந்து மதத்தை வசைபாடிய சில பிரபல முகங்கள் தரிசனம் செய்ய வந்த போது, அவர்கள் முகத்தில் குத்தாமல் அவர்களுக்கு நமது கலாசாரத்தின்படி, அவர்களை ஆசிவாதம் செய்து, அவர்களை கௌரவித்தது ஒரு பெரிய வேள்வியே- இதை ஒரு இந்துவால் மட்டும் செய்ய முடியும். இந்த மாதிரியான செயல்களை நாம் கிண்டல் அடித்தோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மாதிரி கிண்டல் அடிப்பதும், நம்மை நாமே வசைபாடிக் கொள்வதும், இந்து மதத்தின் சக்தியா , இல்லை இந்து மதத்தின் பலவீனமா என்று தெரியாது. ஆனால், இந்த வைபவம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியதை நம்மால் மறக்க முடியாது. இந்த வைபவத்தின் அனுபவங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து கொள்வோம் என்பது உண்மையே.

Comments are closed.