‘பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பற்றி மட்டுமே இனி பேச்சுவார்த்தை – ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

”ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டது ஆகும்.

இந்தியா தவறு செய்ததாகக் கூறி நமது அண்டை நாடு பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டுகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், அது இப்போது பாகிஸ்தான் வசமுள்ள ‘பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பற்றியதாகத்தான் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவர்கள் நாட்டின்மீது பாலகோட்டை விட பெரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதிலிருந்து பாலகோட்டில் இந்தியா செய்ததை பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக்கொள்கிறார் என்று தெரிகிறது” என்றார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.