உத்தரப்பிரதேசமாநிலத்தில்தொழில்துறைகளைமேம்படுத்துவதற்காகமுதல்வர்யோகிஆதித்தியநாத்பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார வாகனங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலை மையமாக உத்தரபிரதேசத்தை உருவாக்கும் முயற்சியில் அம்மாநிலம் ஈடுபட்டுவருகிறது. இதற்காக பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களிடம் இருந்து திட்டங்கள் பெறப்பட்டுள்ளன.அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்குச் சாலைவரிவிலக்கு, பதிவுகட்டணவிலக்கு, சார்ஜிங் நிலையங்களை அமைத்தல், ஆட்டோ, டெம்போவை தவிர்த்து இ-ரிக்க்ஷாவை மேம்படுத்த உதவிகள், கடன் திட்டங்கள் போன்றவையும் வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.