குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள அமித் ஷா, “உலகளாவிய தலைவர் ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நரேந்திர மோடி கடந்த 19 ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூட பேசாமல் வலியை சகித்துக்கொண்டு, ஆலகால விஷத்தை விழுங்கி தொண்டையில் அடைத்த சிவபெருமானை போல இருந்தார். தற்போது, உச்சநீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துவிட்டதுடன் ஏன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன? என்று கேள்வி கேட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சுமார் 300 பக்கங்களைக் கொண்டது. அதில் உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கியுள்ளது. மேலும், குறைந்த சேதத்துடன் நிலைமையை அன்றைய மாநில அரசு கட்டுப்படுத்தியது, சாட்சி பாதுகாப்பு திட்டத்தை மாநில அரசு சரியாக பின்பற்றி வந்தது, நிலைமைய கட்டுப்படுத்த மோடி பல கூட்டங்களை நடத்தியதாகவும், அமைதிக்காக முறையிட்டதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று உண்மை வென்றுள்ளது. மோடி வெற்றி பெற்றுள்ளார்” என்று கூறினார்.