ம.பி மதரஸாக்களில் தேசிய கீதம்

உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ‘எல்லா இடங்களிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். தேசிய கீதம் பாடுவது நல்ல விஷயம். இது பரிசீலனைக்குரிய விஷயம். கண்டிப்பாக பரிசீலிக்கலாம்’ என்று கூறினார். மற்றொரு நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மாநில பா.ஜ.க தலைவர் விஷ்ணு தத் சர்மா, ‘பாகிஸ்தானில் நமது தேசிய கீதம் பாடுமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. நமது நாட்டில் உள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் அனைத்து மூலைகளிலும் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் தேசிய கீதமும் மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கமும் வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை’ என கூறினார்.