காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு சிறுமியின் குடும்பத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தினார். அது போக்சோ சட்டப்படி குற்றம் என்பதால் அவரது டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக டுவிட்டரால் நிறுத்தப்பட்டது. இது குறித்து யூடியூபில் கருத்துத் தெரிவித்த ராகுல், தன் மீது தவறே இல்லை என்பதைபோல காட்டிக்கொண்டார். டுவிட்டரில் தன்னை பின்தொடரும் 2 கோடி பேரின் கருத்துரிமையை மறுக்கும் செயல். அரசின் கைப்பாவையாக டுவிட்டர் மாறிவிட்டது, தனது கணக்கை நிறுத்துவது நியாயமற்றது, டுவிட்டர் ஒரு நடுநிலை தளம் அல்ல, முதலீட்டாளர்களுக்கு, இது ஆபத்தான விஷயம், இது டுவிட்டரின் ஆபத்தான விளையாட், இது பின்விளைவுகளை இது ஏற்படுத்தும் என டுவிட்டரை மிரட்டும் தொணியிலும் பேசியுள்ளார்.