மதுரை ஆதின மடத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து, 293வது புதிய ஆதீனமாக (மடாதிபதி) ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து தருமபுரம் ஆதினங்களும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புதிய ஆதீனம் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.