காஷ்மீரில் 370 ஆவது சட்டபிரிவின் படி அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய வெளிநாட்டு தூதர்கள் 16 பேர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர்.
அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ((Kenneth Juster)), தென்கொரிய தூதுவர் ஷின் போங் கில் ((Shin Bong-kil)0, நார்வே தூதுவர் ஹான்ஸ் ஜேக்கப் ஃபிரைடெலுன்ட் ((Hans Jacob Frydenlund)), மற்றும் நார்வே, வியட்நாம், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்களும் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு, 370ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, கடந்த ஆண்டு, அதிரடியாக அறிவித்தது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரிவினைவாத தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
வன்முறை அரங்கேறாமல் இருக்க, மாநிலம் முழுவதும், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.தனி விமானம்இந்நிலையில், அமெரிக்கா, வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட,16 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், ஜம்மு -காஷ்மீருக்கு நேற்று வந்தனர்.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய, அவர்கள் தனி விமானம் மூலம் வந்தனர். அவர்களை, யூனியன் பிரதேச மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.அங்கிருந்து, ராணுவ முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்களுக்கு, ஜம்மு – காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும், நிலைமையை சீர்செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விளக்கப்பட்டது.
ஜம்முவில், நேற்றிரவு தங்கிய அவர்கள், ஜம்மு – காஷ்மீர் துணை நிலை ஆளுனர் கிரிஷ் சந்திர மர்முவை, இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.வலியுறுத்தல்ஜம்மு – காஷ்மீருக்கு, மற்றொரு நாள் வருவதாக கூறியுள்ள ஐரோப்பிய யூனியன் துாதர்கள், அந்த பயணத்தில், முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரை சந்திக்க, தங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வெளிநாட்டு துாதர்களை சந்தித்தற்காகவும், மக்களின் விருப்பத்துக்கு மாறாக, மத்திய அரசுடன் மறைமுகமாக பேச்சு நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டி, எட்டு நிர்வாகிகளை, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி நீக்கியுள்ளது.மத்திய அரசு பதிலடிகாங்., விமர்சனத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜம்மு — காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவே, வெளிநாட்டு துாதர்கள் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.வெளிநாட்டு துாதர்கள், காஷ்மீருக்கு மேற்கொள்ளும் பயணம் இன்னும் முடியவில்லை. ஐரோப்பிய யூனியனின் துாதர்கள், காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், அனைவருக்கும், மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை. வழிகாட்டியுடனான சுற்றுலா என்று சிலர் விமர்சனம் செய்வது ஆதாரமற்றது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர்களை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் தூதர்கள் மற்றும் அதிகாரிகளிடம், காஷ்மீர் குறித்து பாக்., பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினர். ஜம்மு காஷ்மீரில் வன்முறையை பரப்புவதற்கு பாக்., வெகுவாக முயற்சித்தது, ஆனால் அது முடியாமல் போனதால் அது விரக்தியடைந்துள்ளது. காஷ்மீரில் இருந்து ஒரு அங்குல நிலத்தை கூட பாகிஸ்தானால் பறிக்க முடியாது என்று அவர்கள் தூதர்களிடம் தெரிவித்தனர். இதை பாக்கிடம் எடுத்துச் சொல்லும் படி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
காங்., கண்டனம்
அமெரிக்கா உள்ளிட்ட, 16 நாடுகளைச் சேர்ந்த துாதர்களை, ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல அனுமதி வழங்கியதற்கு, காங்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, காங்., கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல, இந்திய அரசியல் தலைவர்களை அனுமதிக்காமல், வெளிநாட்டுத் துாதர்களுக்கு அனுமதி வழங்கி, மத்திய பா.ஜ., அரசு, இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வெளிநாட்டு துாதர்களை, வழிகாட்டியுடன் அழைத்துச் செல்லும்சுற்றுலாவை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தடையில்லாத அனுமதியை, மத்திய அரசு வழங்க வேண்டும்.ஜம்மு – காஷ்மீரில், அர்த்தமுள்ள அரசியல் நடவடிக்கைகளே வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.