பரதன் பதில்கள்

தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்? -–வி. முருகானந்தம், உடன்குடி

நரகாசூரனை, கிருஷ்ண பகவான் வதம் செய்த பின்னர், தனது உடல் முழுவதும் படிந்திருந்த ரத்தக் கறைகள் நீங்க எண்ணெய் தேய்த்து குளித்தார். அதன் வழியில் தீபாவளியை கொண்டாடும் மக்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள்.

 

தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்கிறார்களே ஏன்? – –ஜி. செந்தில்குமார், தூத்துக்குடி

தீபாவளி எண்ணெய் குளியலில் நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், நாம் குளிக்கும் வெந்நீரில் கங்கா தேவியும், சீயக்காயில் சரஸ்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பதால், கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.

 

டிசம்பர் 31க்குள் டிரம்ப், மோடி ஆட்சியை கவிழ்த்து விடுவார் என பாலிமார்க்கெட்டில்
9 சதவீதம் பேர் பந்தயம் கட்டியிருக்கிறார்களாமே! – எஸ். ஆறுமுகம், தென்காசி

இந்தியாவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச சதி என்பதற்கு, இதைவிட நல்ல சான்று இருக்க முடியாது! டிரம்ப்பும், எலன் மாஸ்க்கும் தோற்கப் போகும் இடம் இந்தியா!

 

இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானியா என எலன் மாஸ்க் கேள்வி எழுப்பி இருக்கிறாரே? – இ. பிரேமா, புதுக்கோட்டை

தனது ஸ்டார்லிங்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்ற கோபம். இன்று ஐந்து ரூபாய்க்கு ஒரு ஜி.பி டேட்டா கிடைக்கிறது. காரணம் யார் என்பதை நாடு அறியும். டிஜிட்டல் புரட்சியை முன்னெடுக்கும் இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் ஆபத்து!

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில், கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிக்கு ஆயிரம் ஓட்டுகள் தானே வாங்கி
இருக்கிறது? –வி.ஆர். ராஜேஸ்வரி, பழனி

உயிரற்ற இந்தக் கட்சியை தூக்கி சுமந்தது திமுகவின் குற்றம். இப்போது தூக்கி சுமப்பது தவெகவின் குற்றம். மதுரை எம்.பி
சு.வெங்கடேசனுக்கு வாயைத் திறந்தால் பொய்தான் வருகிறது. இவர்களை இப்படியே தூக்கி வீசி விடுவது தவெகவிற்கு நல்லது.

சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்திற்கும் (SIR), தேர்தல் ஆணையத்திற்கும் ஆதரவாக
42 முன்னாள் நீதி அரசர்கள் கடிதம் எழுதியுள்ளனரே? –கே. கவிதா, பாளையங்கோட்டை

அவர்களுக்கு நம் பாராட்டுக்கள். இதுபோன்று பல்வேறுத் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் எஸ்.ஐ.ஆர் மற்றும் தேர்தல் ஆணையத்தை ஆதரித்து குரல் கொடுக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

 

நாடெங்கும் நடந்த இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே? – ஆர். சுந்தரி, சுங்குவார்சத்திரம்

டெல்லி ஜந்தர் மந்தரில் கழுதைக்கு போட்டியாக பேரிகேட் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தது, காவல்துறையினரை எட்டி உதைத்தது, இதை எல்லாம் வெற்றிக் கணக்கில் சேருங்கள் சகோ!