மாமியார் உடைத்தால் மணிகுடம் – மருமகள் உடைத்தால் பொன்குடம் என்கிற பழமொழியும் ‘‘வேண்டாத பொண்டாட்டி கைபட்டால் குற்றம் – கால் தொட்டால் குற்றம்’’ என்ற வழக்கு மொழியும் நாம் கேட்டிருப்போம்!
இதை அப்படியே மாற்றி மாமியாரும் மருமகள் எதை உடைத்தாலும் அது மண்குடம்தான் – பொண்டாட்டி கையோடு எதுபட்டாலும் அது சந்தோஷம்தான் தப்பில்லை என்கிற புதிய மொழியை உருவாக்கிய பெருமை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்டு.
நமக்குத் தெரியும் நாடு முழுதும் காங்கிரஸ், கம்யூனிஸ், திமுக ஆதரவுடன் முஸ்லிம் லீக், PFI, SDPI, MMK வை சேர்ந்தவர்கள் CAA வுக்கு எதிராக பெரும் கலவரம் செய்து வருவதும், ஏராளமான பொதுச்சொத்துக்களை நாசம் செய்து வருவதும், இந்த கலவரங்களை கேரளா மற்றும் உ.பி.யில் அதிகமாக பார்க்கு முடிந்தது. இதில் கலவரம் செய்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகள். அவர்கள் 10% லிருந்து 20% வரையுள்ள ஊர்களிலேயே இந்த ‘‘வெறியாட்டம்’’ நிகழ்ந்துள்ளது.
இது சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டிருக்கவேண்டும். இதை உ.பி. அரசு கையாண்ட விதமும் கேரள அரசு கையாண்ட விதமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாததை காண முடிந்தது.
நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு, ஒற்றுமைக்கு விடபட்ட மிரட்டலுக்கு கேரளக் கம்யூனிஸ்டு அரசு முழுதும் துணை போனது. ஆதரவு தெரிவித்தது அம்பலம் ஆகியுள்ளது.
CAAவுக்கு எதிரான கலவரங்களை டிசம்பரம் 4ம் தேதியிலிருந்து துவக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் இதற்கான கூட்டம் சேர்க்கப்பட்டது. பெரிய அளவில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். பலகோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டது.
இந்தப்பணம் எங்கிருந்து எப்படி வந்தது என்பது அரசின் ‘‘அமலாக்கத்துறை’’ ஆராய்ச்சியில் இறங்கியபோது உண்மை வெளியே தெரிந்தது.
சாதாரணமாக வியாபாரத்தில் ஈடுபடவிரும்பும் ‘‘பிஸ்கோத்து’’ நபர்கள் பொட்டிக்கடை சைஸ்கூட இல்லாத தனது பிசினசிற்கு மூக்கில் விரல் வைக்கும் ஆச்சரியமான பெயர்களை வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம்!
1998 கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு ஒரு 2 ஆண்டுகள் வரை கோவையில் தெருவில் தள்ளுவண்டி, சாலையோர வியாபாரிகளில் தாடிவைத்த இஸ்லாமியரை, கைலி கட்டிய முஸ்லிமை பார்க்க முடியவில்லை. பல முஸ்லிம் பெயரிலான கடையை பொதுப்பெயருக்கு மாற்றி அமைத்தனர். அப்போது அவர்கள் மீதான பொதுமக்கள் கோபம் காரணமாக இது நடந்தது.
தற்போது ‘‘STATEGECAL’’ ஆக மிகவும் உன்னதமான பொதுப்பெயர்களை தங்கள் இயக்கங்களுக்கு சூட்டி ‘‘இஸ்லாமியர்கள்’’ என்றும் எண்ணம் வரலாமல் பார்த்துக் கொள்ளும் திட்டத்தை சில ‘‘தீவிரவாதக் குழுக்கள்’’ செய்து வருகின்றன. அவற்றின் நீட்சியாக 2001 ல் தடைசெய்யப்பட்ட ‘‘சிமி’’ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வாக, அதன் வெளிநாட்டு பண COLLECTION WING ஆக “”REYAZ INDIAN FOUNDATION’’ ம் அரசியல் WING ஆக SDPI (SOCIALIFITIC DEMOCRATIC PARTY OF INDIA) சோஷியலிசமும், ஜனநாயகமும் இல்லாதவர்கள்) யும், மனித நேயமே இல்லாதவர்கள் மனிதநேய மக்கள் கட்சி (இது தடைசெய்யப்பட்ட அல் – உம்மா வின் மறு அவதாரம்) என்பன உருவாக்கபட்டன.
இத்தனை வரலாற்றை சொல்வதற்கு காரணம் இந்த PFI யின் REZAB FOUNDATION மூலமாக (37 வங்கிக் கணக்குகளும்) பல கோடி ரூபாய் பணம் CAA எதிர்ப்பு கலவரங்களுக்கும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பினரயி விஜயன் CAA ஆதரவு ஊர்வலம் நடத்திய பாஜக காரர்கள் மீது 100க்கும் அதிகமான வழக்குகளை போட்டுள்ளார். ஆனால் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, கலவரம் செய்போது சொத்துக்களை நாசம் செய்த PFI, SDPI, மீது ஒருவழக்கு போடவில்லை PFI மறுமகள் என்ன செய்தாலும் இவருக்கு தவறில்லை. சாதாரணமாக கம்யூனிஸ்டுகள் நாக்கில் நரம்பில்லாதவர்கள், நெஞ்சில் ஈரமில்லாதவர்கள், பொய் சொல்ல அஞ்சுவதில்லை. சட்டமன்றத்தில் பேசிய பினரயி, அமைதியான CAA எதிர்ப்பு ஆர்ப்பாடங்களில் PFI உள்ளே புகுந்து மக்கள் ஒற்றுமையை சிதைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் மாநிலம் முழுதும் நடைபெற்ற கலவரங்களில் அவர்களின் மீது ஒரு வழக்கு கூட போடவில்லை. தன்னுடைய CAA எதிர்ப்பு TRP ஐ PFI பறித்துக் கொண்டே விடுமோ என்கிற பயத்தில் அவர்களை தூற்றுவது போல நடிப்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.
பயங்கரவாதிகளை ஓட்டுக்காக ஆதரிப்பது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் என்பதால் – காங் தலைவர் ரமேஷ் சென்னித்தாயி PFIக்கு ஆதரவாக தொடர்ந்து முட்டுக்கொடுத்து வருகிறார். இதோடு மட்டுமல்ல, கர்னாடக மாநிலம் மங்களூரில் நடந்த CAA எதிர்ப்பு கலவரத்திலும், கேரளா PFI தனது ஆட்களை (சித்திக் – ஹமீஸ்) அனுப்பியது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி கேரளாவில் செல்லப்பிள்ளையாக இருக்கும் PFI, SDPIக்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு கட்டுப்பாடான, க டுமையான தாய்மாமனாக மாறி, நல்ல பாடம் புகட்டி வருகிறார்.
ஆம்! இதே மாதிரி உ.பி.யில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகம் இருக்கும் மாவட்டங்களில் PFI கை ஓங்கி போலீஸ் ராணுவத்துக்கு வெளிப்படை சவால் விடுவதோடு பொது சொத்துக்களையும் தேசப்படுத்தி ஏராளமான வன்முறை வெடிக்கச் செய்தனர்.
இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு மாநில முதல்வர் அதுவும் ஒரு சாதுசாமியார் வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கை விட்டார். 408 PFI குண்டர்களை அதன் மாநிலத் தலைவர் – பொருளாளர் உள்ளிட்டோரை கைது செய்து வழக்கு போட்டார் – 498 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்தார். ஆக ஏலம் விட்டு பொது சொத்துக்களை ஈழப்பீடாக அறிவித்தார்.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என UP போலீஸ் அதிகாரி அகிலேஷ் நாராயண் சிங் சொல்லுமளவுக்கு சுதந்திரம் கொடுத்தார் யோகி.
‘‘கலவரத்தில் ஈடுபடும், பொது சொத்துக்களை நாசப்படுத்தும் வன்முறையாளர்கள், அதிர்ச்சியில் உறைந்து அழுது புலம்பவேண்டியிருக்கும்’’ – என தனது டுவிட்டரில் யோகி எச்சரித்தார்.
ஆக நாட்டுக்குள் வர – நாட்டுக்கு நாடு போக ஒரு கடவுச்சீட்டு (PASSPORT) அவசியம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை. ஆனால் இந்தியாவுக்குள் வர எதுவும் தேவையில்லை. இது ஒரு சத்திரம் என்று இதுவரை இருந்ததை பாஜக மாற்றி அமைத்ததை வரவேற்க வேண்டியது ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனின் கடமை. இதை ஏற்காதவன் இந்தியன் அல்ல என்று சொன்னால் அதில் என்ன தவறு?
நீ இந்தியனா என்பதை காங்கிரசும், கம்யூனிஸ்டும் திமுகவும், இஸ்லாமியரும் முடிவு செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆம் CAA எதிர்ப்பு போராளி – இந்தியனா? இந்தியனாக இருந்தால் ஏன் இந்தியாவிற்கு எதிராக போராட வேண்டும்? சரியான கேள்விதானே!