சீனா நேபாளத்தின் எல்லைபுற கிராமங்களை மெதுவாக ஆக்கிரமித்து வருகிறது. அங்கு தன்னுடைய படைகளையும் குவித்து வருகிறது. அந்த பகுதிகள் தனக்கானவை என நிரூபிக்க அங்கு 12 எல்லை தூண்களை நிறுவியுள்ளது. இது குறித்து அதிருப்தி தெரிவித்தார் நேபாள எதிர்கட்சி தலைவர் ஜீவன் பகதூர் ஷாஹி. இவருக்கு சீனா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் ‘எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு சீனாதான் முழு காரணம்’ என ஷாஹி தெரிவித்துள்ளார்.