காங்கிரசுக்கு அடுத்த சங்கடம்

அகஸ்டா வெஸ்ட் வழக்கில் வசமாக மாட்டிக்கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது மேலும் ஒரு சங்கட்த்தில் சிக்கியுள்ளது. 2016 முதல் 2019 ஆம் ஆண்டுக்குள் 106 கோடியை கணக்கில் வராமல் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. எந்த தேதியில் எவ்வளவு பணம் பெறப்பட்டது என வருமானவரித்துறையின் 408 பக்க அறிக்கையில் இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி வெளியிட்டதால் செய்வதறியாது விழிக்கிறது காங்கிரஸ். முன்னதாக அகஸ்டா வெஸ்ட் ஹெலிகாப்டர் வழக்கில் அகமது படேல், சல்மான் குர்ஷித், கமல்நாத்தின் மகன் பகுல்நாத், சோனியா மருமகன் ராபர்ட் வதோராவின் நண்பர் ராஜீவ் சக்சேனா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.