தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் காவல்துறை மானிய கோரிக்கையை தொடர்ந்து முதல்வர் ஜோசப் விஜய் 2026 செப்டம்பர் 7 அன்று சட்டமன்றத்தில் திமுகவின் கேள்விகளுக்கு அளித்த பதிலுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்க்காரியா ஊழல் தொடங்கி, சென்ற ஆட்சியின் போது முதல்வரும், துணை முதல்வரும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஊழல் வரை அனைத்தையும் எடுத்து வைத்து பேசினார் முதல்வர். கவியரசு கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்திலிருந்து, ” பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை — இதுதான் திமுக!” என்று அவர் மேற்கோள் காட்டிய போது, திமுக உறுப்பினர்கள் தவிர மொத்த சட்டமன்றமும் ரசித்து சிரித்தது.
நெருக்கடி காலத்தில் கைது செய்யப்பட்ட திமுகவினரை பல இடங்களில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஊர்வலம் அழைத்துச் சென்றது போலீஸ். ஆங்காங்கே அடி பிரித்து விட்டனர். இதனால் பலர் தங்கள் கரை வேஷ்டியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டார்கள். வீட்டுக்கு போலீஸ் வந்து விடும் என்ற பயம். இது பழைய கதை. இன்று அதே பயம் சட்டமன்றத்தைப் பார்த்து திமுகவுக்கு வந்திருக்கிறது.
திமுக எதிர்ப்பு விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய தீவிரத்தை அடுத்து விஜய் காட்டும் தீவிரம் திமுக எதிர்ப்பாளர்களை அவர் பக்கம் கொண்டு சேர்த்திருக்கிறது. தவெக அரசின் இந்த செயல் ஆட்சிக்கு வலு சேர்த்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. முந்தைய திமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் ஒலித்த மோடி வெறுப்பும், வன்மமும் இப்போது சட்டமன்றத்தில் இல்லை.
ஆளுநர் உடனான உறவில் சிக்கல் இல்லை. தேவையான இடத்தில் சரியான ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது. கூட்டணிக் கட்சியினர் மோடி அமித்ஷா என்று தவறாக பேச துவங்கி விட்டால், இதையெல்லாம் சட்டமன்றத்துக்கு வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கறாராக கூறி விடுகிறார் சபாநாயகர். கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறுகிறார் முதல்வர். அவரது கட்சி அமைச்சர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்கிறார்கள். இவை நல்ல விஷயங்கள்.
அதேவேளையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, அவ்வப்போது சுவிசேஷ கூட்டமாக மாற்றப்படும் சட்டமன்றம், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கு தேவையில்லாமல் அடிபணிவது, ஆர்வ மிகுதியில் சட்டமன்றத்தை காட்சிக்கூடம் ஆக்கும் செயல்கள் ஆகியவற்றை தடுத்து விட்டால்தான் சட்டமன்றமும், ஆட்சியும் சரியாக பயணிக்கிறது என்று நம்மால் சொல்ல முடியும். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் கண்ணில் தெரியவில்லை என்பது துரதிஷ்டம். இதை புரிந்து கொள்வது முதல்வருக்கு நல்லது!