நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தால் என்றோ சென்றிருப்போம் ஆனால் எங்கள் தாய்நாடு இந்தியா. மதத்தால் தேசம் பிளவுப்பட்ட போதும், நாங்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். இதை விட்டு நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம். இப்படி நம்முள் ஒருவராய் இருக்கும் ஒரு சாமானிய இஸ்லாமியர் சொல்லியிருந்தால் கண்டிப்பாக நம்பியிருக்கலாம். ஆனால் இப்படி சொன்னவர், உலகின் சக்தி வாய்ந்த 50 இஸ்லாமிய மதவெறி அடிப்படைவாதிகளில் ஒருவரான, AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி.
‘ஏன்ப்பா அவர் சொன்னா நம்ப மாட்டியா?’ என சிலர் கேட்கலாம். அதற்கு முன் இந்த ஓவைஸி & கும்பலின் வரலாற்றைப் புரிந்து விட்டு அந்தக் கேள்வியைக் கேளுங்கள். 1920களின் இறுதியில் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கானின் அறிவுரைப்படி MIM என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கையே, முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஒரு தன்னாட்சி தேசத்தை உருவாக்குவது தான். அதாவது இந்தியாவுடன் இணையும் எண்ணமே கிடையாது. 1944ல் காஸிம் ரஜ்வி (Qasim Razvi) என்பவர் இந்த MIM அமைப்பிற்கு தலைமை ஏற்கிறார்.
காஸிம் ரஜ்வி தீவிர இந்திய எதிர்ப்பாளர் சாதாரண அமைப்பாக இருந்த MIMல், ரஜாக்கர் என்கிற தீவிரவாத பயிற்சி பிரிவை உருவாக்கினார். கிட்டத்தட்ட 2 லட்சம் தீவிரவாதிகளை கொண்ட பிரிவு அது. அவர்களின் முழு முதல் வேலையே ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைப்பதை எதிர்ப்பதாகும். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு “தெற்கு பாகிஸ்தான்” என்ற பாகிஸ்தானின் மாகாணம் இந்தியாவுக்குள்ளே தனி என்கிளேவ் போல உருவாக்க வேண்டும் எனப் போராடினார்கள். பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. நம் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆபரேஷன் போலோ ஆரம்பிக்கிறார். வெறும் 35,000 இந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு ஹைதரபாத் நிஜாமின் 22,000 ராணுவ வீரர்கள் மற்றும் 2,00,000 ரஜாக்கர்கள் என அனைவரையும் அடித்து ஏற்கனவே தனிநாடாக பிரித்து கொடுத்த பாகிஸ்தானுக்கு ஓட வைத்து ஹைதராபாத்தை இந்தியாவின் அசைக்க முடியாத பிரதேசம் என நிரூபித்தார் படேல். அந்த பிரதேசம் தான் தற்போதைய தெலங்கானா மாநிலம்.
ரஜாக்கர் என்கிற தீவிரவாத அமைப்பை வைத்து இந்திய ராணுவத்தை எதிர்த்த குற்றத்திற்காக காஸிம் ரஜ்வி 1957 வரை சிறையில் இருந்தார். பின் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆனதும் அண்ணன் ரஜ்வி செய்த முதல் வேலை பாகிஸ்தானில் போய் குடியேறியது தான்.
இன்று வரை அன்னாரின் வாரிசுகள் இருப்பது பாகிஸ்தானில் தான். தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதாலும் மத ரீதியாக மக்களைப் பிளவு படுத்தியதாலும் அந்த MIM அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கு ஓடிப் போகு முன் ரிஜ்வி MIM கட்சியை அப்படியே அப்துல் வகீத் ஓவைஸி என்கிற இஸ்லாமிய வக்கீலிடம் ஒப்படைக்கிறார். வக்கீல் அல்லவா? பிரிவினை வாதம் பேசியதால் தடை செய்யப்பட்ட அமைப்பை அப்படியே தொடர முடியாது எனப் புரிந்து கொண்டார். MIM என்பதை AIMIM எனப் பெயர் மாற்றம் செய்கிறார்.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? கழிப்பிடத்திற்கும் நவீன கழிப்பிடத்திற்கும் இருக்கும் வித்தியாசம் தான். அந்த அப்துல் வகீத் ஓவைஸியின் பேரன் தான் இந்த அசாதுதீன் ஓவைஸி. இந்தியா என்கிற தேசமே பிடிக்காமல் இந்தியாவோடு இணையும் சிந்தனையே இல்லாமல் மத ரீதியாக மீண்டும் தனி நாடு கேட்டுப் போராடிய தீவிரவாதம் செய்து பாகிஸ்தானுக்கு ஓடிப்போன தலைவனைக் கொண்ட கட்சியின் இன்றைய தலைவர் தான் சொல்கிறார் நாங்கள் இந்தியர்கள் என. அதுவும் அந்த கட்சி ஆரம்பித்து 93 ஆண்டுகளுக்குப் பின். நாடு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தான் அவர்களுக்குத் தாங்கள் இந்தியர்கள் என்கிற சுரணையே வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். போதாகுறைக்கு ‘நாங்கள் கோவில் கட்ட 10 கோடி பணம் திரட்டினோம்‘ என்கிறார் இந்துக்களை ஏமாற்றி தாஜா செய்ய. எந்தக் கோவில் கட்ட எப்போது 10 கோடி திரட்டினீர்கள் என்று பிஜேபியை தவிர வேறு எவனும் கேட்க மாட்டானே அந்த தைரியத்தில் எதையாவது அடித்து விடுவது தான். சரி அந்த ஓவைஸியிடம் ஏன் இந்தத் திடீர் மாற்றம் ???
அதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி. இத்தனை நாள் பிரிவினைவாதமும் இந்து மத எதிர்ப்பும் பேசிக்கிட்டு இருந்தவனை எல்லாம், ‘நானும் இந்தியன்’, ‘நானும் இந்து’, ‘இந்து எங்கள் சகோதரன்” எனப் பதறி கதற வைத்திருப்பது தான் பாஜக சித்தாந்தத்தின் ஆகப்பெரிய வெற்றி. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், திமுக, மாமாவளவனில் ஆரம்பித்து இப்படி கதறியவர்களின் பட்டியலில் கடைசியாக சேர்ந்திருப்பவர் தான் இந்த அசாதுதீன் ஒவைஸி. 93 வருடம் பிரிவினைவாதம் பேசியவரின் திடீர் இந்தியப் பாசம் எப்படி இருக்கும் என்பதை நடுநிலை இந்துக்கள் மற்றும் நாட்டுப்பற்றுள்ள உண்மையான இந்திய முஸ்லிம்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இந்த லட்சணத்தில் இந்த அண்ணன் ஓவைசி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மேற்குவங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம், உத்தர பிரதேஷம் மாநில சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட போகிறாராம். அவரது கோட்டையாக இருந்த ஹைதரபாத்திலேயே நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டையை போட்டுவிட்டது பிஜேபி. அதான் இவ்வளவு கத்தலும் கதறல்களும் சத்தமாக ஒலிக்கிறது ஓவைசியிடம் இருந்து.