கால்பந்து ஜாம்பவான் மாரடோனா

இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் கால்பந்து விளையாட்டில் தனி இடம் பெற்றிருப்பவரும் ஈடு இணையில்லா விளையாட்டு வீரனுமான கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு என்பது கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் இழப்பு உலகில் நம்பர் 1 விளையாட்டு கால்பந்துதான், அதில் எக்காலமும் சந்தேகமில்லை. அதன் வேகமும் அதில் காட்ட வேண்டிய விவேகமும் நொடியில் பாயும் சாதுர்யமும் 4 பக்கமும் கண்களை சுழற்றும் லாவகமும் வேண்டும்.

அதில் கொடிகட்டி பறந்தார் மாரடோனா 1980களில் உலகம் அவர் பின்னால்தான் ஓடி கொண்டிருந்தது, அர்ஜென்டினாவுக்கு இருமுறை கோப்பை பெற்று கொடுத்தவரும் அவர்தான். கால்பந்து கடவுள் பிலே இவருக்கும் மூத்தவர் ஆனால் 60 வயதே ஆன மாரடோனா மரணிக்க ஒரே காரணம் அவருக்கு இருந்தபோதை பழக்கம்ஆம் அவரை அறியாமல் தொற்றியபோதை பழக்கம் அவரின் உயிரை பறித்துவிட்டது, எத்தனையோ களங்களில் எதிரிகளிடம் சிக்காமல் கோல் அடித்த மாரடோனா, போதை வழக்கத்திடம் தோற்று வீழ்ந்துவிட்டார்.

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் கால்பந்தும் களமும் இருக்கும் வரை அவர் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.ஒருவன் எப்படி கால்பந்து ஆட வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம், ஒருவன் எப்படி உடலை கெடுத்து நாசமாக போக வேண்டும் என்பதற்கும் அவர்தான் உதாரணம் ஒருமுறை பேட்டியில் சொன்னார், அவரின் உடல்நிலை மற்றும் போதை பழக்கம் மகா மோசமாயிருந்தபொழுது சொன்னார்.என்றைக்கு கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்றேனோ அதன் பின் நான் வாழ என்ன அவசியம்?” ஒருவகையில் வலி உள்ள வார்த்தை அது, ஆம் அவர் அந்த விளையாட்டை வாழ்ந்திருக்கின்றார்.

ஒருவிளையாட்டு ஜாம்பவானும் உலகை கதறவைக்க முடியும், விளையாட்டின் சக்தி என சொல்லி கொண்டிருக்கின்றது மாரடோனாவின் இறுதி நிகழ்வுகள் மாரடோனா அர்ஜென்டினாவின் அடையாளம் என அறிவிக்கபட்டு அவரின் உடல் அதிபர் மாளிகையில் வைக்கபட்டுள்ளது, உடல் தாங்கிய பெட்டிக்கு அவரின் பிரசித்திபெற்ற 10ம் நம்பர் உடை போர்த்தபட்டுள்ளது. அர்ஜென்டினா முழுக்க சோக கீதம் இசைக்கபடுகின்றது. கண்ணீர் ஆராக ஓட எங்கு திரும்பினாலும் மலர்களாலும் மெழுவர்த்திகளாலும் அஞ்சலிகள் நடக்கின்றன‌.

தென் அமெரிக்க நாடுகள் தங்களின் கால்பந்து நட்சத்திரம் உதிர்ந்துவிட்டதாக புலம்புகின்றன‌இதிலும் கத்தோலிக்க மற்றும் பிரிவினை பாகுபாடு பட்டவர்த்தனமாக தெரிகின்றன, அப்படியே லத்தீன் அமெரிக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க மோதலும் தெரிகின்றது. ஆனால் அதையும் தாண்டி உலகெல்லாம் அந்த மாபெரும் சாகச ஆட்டகாரனுக்கு அஞ்சலிகள் குவிகின்றன‌. ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அரங்கம் முன் அவருக்கு விஷேஷ அஞ்சலிகள் நடக்கின்றன, பிரசித்தி பெற்ற ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் ஆட்டம் ரத்து எனும் அளவில் இரங்குகின்றது.

இந்தியாவின் கேரள மாநிலம் துக்கதினம் அனுசரிக்கின்றது. கோடான கோடி ரசிகர்கள் அர்ஜென்டினா அணியின் டிசர்ட்டை அதுவும் 10ம் எண் பதிந்து அவனை வழியனுப்புகின்றனர். காமராஜர் கண்ணதாசனின் போதை பழக்கத்தை அடிக்கடி கண்டித்தது போல மாரடோனாவின் போதை வழக்கத்தை அடிக்கடி கண்டித்தவர் பிடல் காஸ்ட்ரோ பொதுவாக போதை பித்தர்களிடம் ஒரு நல்ல குணம் உண்டு, ஆம் யார் தங்களிடம் அன்பு காட்டுவார்களோ அவர்களிடம் அப்படியே உருகுவார்கள். ஆம் அன்பு அதிகம் கிடைக்காத ஒரு மானிடனே முழு போதை அடிமையாவான், அன்பு தெரியுமிடம் அவன் கதறி அழுது அடைக்கலம் ஆவான், இது பொது நியதி காஸ்ட்ரோவின் அன்பில் கட்டுபட்டு அவரை கொண்டாடிய மாரடோனா அவர் இறந்த அதே நவம்பர் 25ம் தேதி இறந்தது ஆச்சரியமல்ல, காஸ்ட்ரோ மேல் அவன் கொண்ட அன்பு அப்படி காமராஜரும் இப்படித்தான் காந்தி பிறந்தநாளில் இறந்தா காந்திமேல் பற்று கொண்ட சாஸ்திரி காந்தி இறந்தநாளில்தான் இறந்தார்.

எம்.ஆர் ராதா தன் தலைவன் ஈரோட்டு ராம்சாமி பிறந்த நாளில் இறந்தார். சில மகான்கள் கூட இறைவனுக்கு உகந்த நாளில் இறப்பார்கள் இப்படி யாரை அதிகம் ஒருவன் நேசிப்பானோ அவர்களின் சிறப்பு நாளிலே மரணமடைவான், மாரடோனாவின் மரணம் அதை மெய்பிக்கின்றது தன் கால்களால் வித்தைகாட்டிய அந்த சாகச காரனுக்காக உலகெல்லாம் கோடான கோடி கண்கள் அழுது கொண்டிருக்கின்றன‌.

தன் கால் அசைவில் பந்தை சுழலவைத்த வித்தைகாரனுக்காக கோடான கோடி கண்கள் நிலை குத்தி நிற்கின்றது. கடவுள் கால்பந்து ஆட்டகாரனாக கொஞ்சகாலம் அர்ஜென்டினாவில் வாழ்ந்திருக்கின்றார் எனும் ஆறுதலோடு அவனின் இறுதி காட்சிகள் நடக்கின்றன.