என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பொய்கையில் அரனும் உமையவளும் எழுந்து இருப்பதுபோல் கண்டு மகிழ்கிறார்கள்பெண்கள். உடனே, மழையுடன் தொடர்பு கொண்டுள்ள, மேகம், இடி, மின்னல், மழை, வானவில்அனைத்துமே எவ்வாறு இறைவியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றன என்று உருவகிக்கிறார்கள்.இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள்சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில்
அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பெய்து, உலகைச் செழிக்கச் செய்வாயாக என்று வேண்டுகிறார்கள். தாங்கள் நீராடிய குளத்தினை, அம்மையப்பனின் உருவமாகவே கண்டு களிக்கிறார்கள் இப்பெண்கள். அப்பொய்கை எப்போதும் அவ்வாறு நீர் நிறைந்த நிலையில் கவின்மிகு காட்சியுடன் காணப்பட வேண்டும் என்ற கவலை எழுந்தது போலும்; நீர் நிறைந்து இருப்பதற்கு மழை பொய்க்காமல் உரிய காலத்தில் பொழிய வேண்டும் அல்லவா. எனவே வர்ஷிக்கும் மழையை பொழிக பொழிக
என்று என்று இறைவியிடம் கோரிக்கை வைக்கின்றனர். கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, கருநிற மேகங்களாக மாறி வானத்தில் மிதக்கின்றன என்கின்ற விஞான யுக்தியை 12 நூற்றாண்டுகளுக்கு முன்பே மணிவாசகர் கூறிய கூற்று நமது பண்டைய மக்களின் விஞான அறிவின் மேன்மையை பறை சாற்றுகிறது.