தூக்கத்திலிருக்கும் பெண்ணை நோக்கி,” “பறவை உருவமெடுத்து பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், அரக்கனான ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம்
எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடி நாம் அனைவரும் பாவை நோன்பு நிகழும் இடத்திற்குச் சென்று விட்டோம். கீழ்வானத்தில் சுக்கிரன் என்ற வெள்ளிக்கிரகம் உச்சிக்கு வந்து விட்டது, குரு என்ற வியாழக் கிரகம் மறைந்து விட்டது! பறவைகள் பாடத் தொடங்கி விட்டன. விழித்தும் விழிக்காமல் அரை நித்திரை காண்பவளே!
விடியலை உணர்த்தும் அறிகுறிகள் தெரிந்தும், குளிக்க வராமல் படுக்கையில் கிடந்து என்ன செய்கிறாய் பெண்ணே ! தூக்கத்தைத் தவிர்த்து எங்களுடன் நீராட வா !,” என கண்ணனைப் பாடிவரும் தோழியர் அழைக்கின்றனர்.