இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வந்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. 2009ல் பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து அது முடிவுக்கு வந்தது. இந்நிலையில் லட்சத்தீவுகள் அருகே, புலிகள் அமைப்பின் உளவு அதிகாரி செபாஸ்டியன் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புலிகள் அமைப்பைப் புதுப்பிக்கவும், பணம் திரட்டவும் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிய வந்தது. விடுதலை புலி அமைப்பே சேர்ந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கே என்ற பெண் 2019ல் இலங்கையில் இருந்து பாரதம் வந்து விசா முடிந்தும் திரும்பவில்லை. போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார். சமீபத்தில் நடைப்பெற்ற இச்சம்பவங்கள் விடுதலை புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் முயற்சிகள் என தேசிய புலனாய்வு அமைப்பு தமிழக அரசை எச்சரித்துள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று தமிழக அரசியல்வாதிகளை கண்காணிக்கும்படி கூறப்பட்டு உள்ளது. தமிழக அரசு இதில் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து, என்.ஐ.ஏ தனது விசாரணையை முன்னெடுக்கும்.