தமிழகத்தில் ஒரு குட்டி வாடிகன்

சமீபத்தில் பால் தினகரனின் நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ. 1,000 கோடி வரி எய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள சூழலில், தற்போது அவர்கள் குடும்ப நிறுவனமான ‘ஏசு அழைக்கிறார்’ மூலமாகவும் திராவிட கட்சிகளிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியும் இவர்கள் நடத்தியுள்ள பல மோசடிகள் மெல்ல வெளிச்சத்திற்கு வந்துகொண்டுள்ளன.
கோவை, நல்லூர் வயல் கிராமத்தை கிறிஸ்தவ கிராமமாக மாற்ற 1990களில் அங்கு 1,000 கிறிஸ்தவ மாணவர்களை முறை கேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். அங்கு பழங்குடியினர் குடியிருப்பை அகற்ற முயற்சி செய்துள்ளனர். அந்த கிராமத்தை காருண்யா நகர் எனவும் பெயர் மாற்றியுள்ளனர். அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கும் மத்துவராயபுரம் ஊராட்சியை கைப்பற்ற, அங்கு நூற்றுக்கும் குறைவான பழங்குடியின மக்களே வசிப்பதாக போலி கணக்கு காட்டியுள்ளனர் இவர்கள்.