ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நக்கபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வேம்பாடு டோல்கேட் வழியாக காரில் சென்றனர். வேம்பாடு டோல்கேட்டில் உரிய கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றனர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கட்டணத்தை செலுத்த கூறினர். ஆளுங்கட்சியை சேர்ந்த எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி அராஜகத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களை தாக்கியதுடன் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து டோல் பிளாசா நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள நக்கபள்ளி காவல்துறையினர் சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.