ஜார்கண்ட் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (JPSC) தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் தேர்வை ரத்து செய்து, சி.பி.ஐ விசாரணைக்கோரி, மாணவர்கள் போராடிவரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் வினாத்தாள் கசிவோ அல்லது தேர்வு முறைகேடோ புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முக்கிய தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள்:
1. சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) வினாத்தாள் கசிவு – 2006
2. அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (AIEEE) வினாத்தாள் கசிவு – 2007
3. PMT (Pre-Medical Test) வினாத்தாள் கசிவு – 2008
4. AIIMS மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு – 2012
5. சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவு – 2014
6. மகாராஷ்டிரா HSC வினாத்தாள் கசிவு – 2013
7. கர்நாடகா PUC வேதியியல் வினாத்தாள் கசிவு – 2016
8. ராஜஸ்தான் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு – 2013
9. ஹரியானா வாரியத் தேர்வு வினாத்தாள் கசிவு – 2011
10. ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (RPSC) வினாத்தாள் கசிவு – 2013
இப்படி பத்து ஆண்டுகால ஆட்சியில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி ஆளும் மாநிலங்களில் தேர்வு முறைகேடு, ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஜார்கண்ட் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Jharkhand Public Service Commission) மற்றும் ஜார்கண்ட் மாநில ஸ்டாப் செலெக்ஷன் கமிஷன் (Jharkhand Staff Selection Comission) என மாநிலத்தின் இரு பெரும் தூண்களான, இந்த இரு தேர்வு ஆணையங்களும் தேர்வு முறைகேடு நடப்பதை தடுக்காமல் என்ன செய்தன? என மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு தேர்வினை நடத்துவற்காக அமைக்கப்பட ஆணையமே தேர்வை சரிவர நடத்த முடியாமல், தேர்வுக்கு முன் வினாத்தாள் கசிவு, தேர்வில் ஆள்மாறாட்டம், தேர்வுக்கு பின் ஓ.எம்.ஆர் தாளில் திருத்தம், வெளிப்படைத் தன்மையற்ற தேர்வு செய்யும் முறை மற்றும் தேர்வில் ஊழல்கள் என தேர்வுக்கு முன்பும், பின்பும் பல குளறுபடிகள்.
தேர்வினை திறம்பட நடத்த இயலாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் போராடி வரும் மாணவர்கள் சி.பி.ஐ விசாரணை, வெளிமாநிலத்திலிருந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை, குற்றம் செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை, தேர்வின் அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிடுதல் மற்றும் வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க கடுமையான சட்டத் திருத்தங்கள் என கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு, மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலகிட கரப்பான் பூச்சி கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த காங்கிரஸ், தனது கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலத்தில் குறைந்தபட்சம் சிறு நடவடிக்கை எடுத்துள்ளதா? மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் நீட் மறு தேர்வு நடத்தி, விரைவு நீதிமன்றம் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான சட்டங்கள் என மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்கள் போராட்டத்திற்கு, எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருப்பது என்ன வகையான ஆட்சி. மாணவர்களை அவமதித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
முதல்வர் ஹேமந்த் சோரான் அவர்கள், நான் மாணவர்கள் பாதிக்கப்பட்தற்கு எந்தளவிற்கு மனமுடைந்துள்ளேன் என்பதை, எனது நெஞ்சைப் பிளந்து காட்டுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஐயா நீங்கள் உங்கள் நெஞ்சையெல்லாம் பிளக்க வேண்டாம், மாணவர்களின் எதிர்காலத்தை மதித்து இந்தத் தேர்வு முறைகேட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்குங்கள் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டுரையாளர்: மாணவர் சக்தி மாத இதழ் பொறுப்பாளர், ஏ.பி.வி.பி
நம்ம ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராமபிரானுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து, எல்லா நேரத்திலும் ராமருக்கு துணை புரிந்து, தனது வாழ்க்கையை ராமருக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை, இந்த நூல் தொகுத்து வழங்கியுள்ளது.
ராவணன் பிடித்து வைத்திருந்த சீதையை மீட்க, வானரப்படை ராமருக்கு உதவியதையும், ராமர் – லட்சுமணரின் உயிரைக் காக்க சஞ்ஜீவி மலையை ஆஞ்சநேயர் கொண்டு வந்ததையும், ராவணனை வதம் செய்ய ராமருக்கு, அனுமார் எந்தளவுக்கு துணை புரிந்தார் என்பதையும், இந்த நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக, “அனுமன் சாலீஸா” தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயர் 108-ம், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, தமிழில் முழு அர்த்தத்தை புரிந்துகொள்ள நமக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஞ்சநேயரை தினமும் தமிழில் மந்திரம் சொல்லி வழிபட, இந்த நூல் நமக்கு வழிகாட்டுகிறது. ஆஞ்சநேயர், தனது பக்தர்களுக்கு நல்வழி காட்டியதையும், இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆஞ்சநேயரின் வீரதீர சாகச செயல்களை, இந்த நூல் படிப்பதன் மூலமாக, நாம் தெரிந்து கொள்ளலாம். ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.