ஜம்மு காஷ்மீரில் அமித் ஷா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமர்நாத் யாத்திரை, உத்தேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த தியாகிகளின் குடும்பங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் கலந்து கொண்டார். அமீத் ஷா தனது பயணத்தின் போது, ​​ஜம்முவில் நேற்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்) 83வது எழுச்சி நாள் அணிவகுப்பில் கலந்து கொண்டார். டெல்லிக்கு வெளியே சி.ஆர்.பி.எப்  தனது எழுச்சி தினத்தை கொண்டாடுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியில் பேசிய அமீத் ஷா, ‘பாரதத்தில் நீண்ட காலமாக மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சி.ஆர்.பி.எப் செய்து வருகிறது. நாட்டின் கடினமான சூழ்நிலைகளில் மக்களுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஆறுதல் அளித்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தல்களை அமைதியாக நடத்துவதில் சி.ஆர்.பி.எப் முக்கிய பங்காற்றுகிறது. அனைத்து பாதுகாப்புப் படையினர் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் நமது படைகள் மகத்தான வெற்றி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை’ என கூறினார்.