சேலத்தில் கடந்த 1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் தலைமையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது ஊர்வலத்தின் போது ராமர், சீதை புகைப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவுப்படுத்தியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இந்த செயலை கண்டித்து பாரதீய ஜனசங்கத்தினர் அப்போது போராட்டம் நடத்தினர்.
சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் உண்மையை சொன்னார் அதனை கண்டித்து ரஜினி மன்னிப்பு கேக்க வேண்டும் என்று கூக்குரல் இட்டனர். அவரும் நான் உண்மையை தானே சொன்னேன் அதற்க்கு ஏன் மன்னிப்பு கேக்க வேண்டும். முடியாது என்றார் ரஜினிகாந்த். இதையொட்டி நேற்று சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் ராமர் படத்துடன் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு பா.ஜனதாவினர் திரண்டனர்.
பின்னர் அவர்கள் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் படத்துக்கு மாலை அணித்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர்.