தமிழ்நாடு எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள், ஆலயங்கள் நிறைந்த மாநிலம். மிகத் தொன்மையான கலாசாரம், நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
உலகப் பாரம்பரியச் சின்னங்களான மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி, குற்றாலம் ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை பல்வேறு ஒருநாள், ஒருவாரம், பத்து நாள் என சுற்றுலாத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் ஒன்று, ஒருநாள் திருமலா தர்ஷன். அனைத்து சனி, ஞாயிறு காலை 7 மணிமுதல் மாலை 8 மணி வரை ஒன்பது பெருமாள் கோயில்களை தரிசிக்கலாம்.
கட்டணம் : ரூ, 700/-
தொடர்புக்கு : 044-2533 3850