ரஷ்ய அரசு சமீபத்தில் தனது அலைபேசியின் 5-ஜி தொழில்நுட்பத்திற்கு சீனாவின் தொழில் நுட்பத்தை சார்ந்திருக்காமல் தனது சொந்த உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. இதனால் ரஷ்யாவில் இருந்து கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என எண்ணியிருந்த சீன நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இங்கிலாந்து சீனா உடனான வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான கடும் கட்டுப்பாடுகளை விதித்து அதை இணையத்தில் பதிவேற்றியுள்ளது. ஏற்கனவே ஆப்பிள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.