எங்கும் உதவும் ராணுவம்

காாஷ்மீர், லோலாப் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் இயங்க முடியவில்லை. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடித்து குழந்தையுடன் தன் வீட்டிற்கு திரும்ப முடியாமல் இருந்த பெண்ணை இந்திய ராணுவத்தின் ராஷ்டிரீய ரைபிள்ஸ் 28வது பெடாலியன் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று வீட்டில் சேர்த்தனர். ராணுவம் நாட்டை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அனைத்து ஆபத்துகளில் இருந்தும் தாயாய் இருந்து நமக்கு சேவை புரிகிறது என்பது நிதர்சனம்.