சிறுவனை சீரழித்த சி.பி.எம் உறுப்பினர்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் கேரள அரசின் தலைமையில் நான்கு தாலுகாக்கள் மற்றும் மாவட்ட அளவில் மாநில அளவிலான பேரிடர் தணிப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. அவ்வகையில், கோழிக்கோடு மாவூர் பஞ்சாயத்திலும் ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிய 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் இடதுசாரி சி.பி.எம் கட்சித் தலைவரும் மாவூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருமான உன்னிகிருஷ்ணன். ஆம்புலன்ஸ் மற்றும் காரில் வைத்து அந்த சிறுவனை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மாவூர் காவல்துறையினர், உன்னிகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் மொத்தம் 3,729 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இது 3,559 ஆக இருந்தது. அவ்வகையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முன்னெப்போதையும் விட கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. கேரள தலைநகரில் 475 வழக்குகளும் மாவட்டத்தில் 450 வழக்குகளும், எர்ணாகுளத்தில் 368 வழக்குகளும், கோழிக்கோடு மாவட்டத்தில் 350 வழக்குகளும், கொல்லத்தில் 322 வழக்குகளும், திருச்சூரில் 307 வழக்குகளும் பதிவாகியுள்ளன. போக்ஸோ வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று சட்டம் கூறினாலும், பல ஆண்டுகளாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.