சிந்தியா-வின் கர்வாபசி

மத்தியபிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் அமைச்சரவை பெரும் புயல் அடித்து கவிழும் நிலையில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னராக இரு பி.எஸ்.பி எம்.எல்.ஏக்களும் ஒரே ஒரு சமாஜ்வாடி எம்.எல்.ஏவும், நான்கு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ஹரியானா மாநிலம் குர்கானில் ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மத்தியபிரதேஷில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை சீர்குலைக்க சதி என்று முன்னணி தலைவர்கள் புலம்பினார்.

இதனிடையே சொந்த விஷயமாக டெல்லிக்கு சென்றிருந்ததாகவும் இதற்கும் பா.ஜ.க-வுக்கும் சம்பந்தம் இல்லை, என்று அந்த எம்.எல்.ஏக்கள் தன்னிலை விளக்கம் அளித்தனர். ஒருவழியாக அதன் தாக்கம் அடங்குவதற்குள் நேற்று இரவு 17 காங்கிரஸ் எம் எல் ஏக்கள் குறிப்பாக இளம் தலைவர் ஜோதிராத்தியா சிந்தியாவின் ஆதரவாளர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர் என்று பரபரப்பாக செய்திகள் வெளியானது. சிந்தியா டெல்லியில் உள்ளதாக சொல்லிவந்த நிலையில் திடிரென்று இன்று காலையில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதுடன் அவருடன் பிரதமரையும் சென்று சந்தித்தார் சில மணி நேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 22 பேர் தாங்களும் தங்களது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்து கவர்னருக்கு செய்தி அனுப்பினார்கள் .

இந்த நிலையில் மத்திய பிரதேஷில் மூன்று மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது எப்படியாவது இரண்டு இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்று முயன்ற பா ஜ க வுக்கு ஒரு மாநிலமே தங்களின் கைக்குள் கர்நாடகா போன்று கிடைக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். தற்போது நடந்து வரும் இந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணம் பல ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வரும் சிந்தியா குடும்பத்துக்கு சரியான அளவுக்கு மரியாதையை கொடுக்கப்படுவதில்லை. எலாம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா முதல்வராவர் என்ற நிலையில் பழம் பெருச்சாளி கமல்நாத் முதல்வரானார். இதனால் அதிருப்தியில் இருந்து வந்த சிந்தியா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை தோல்வியே கண்டிராத குவாலியர் தொகுதியில் கமல்நாத் ஆதரவாளர்களால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் மனம் நொந்த சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேற நேரம் பார்த்து கொண்டிருந்தார். இதற்கிடையே அவரது அத்தைகள் இருவரும் பா ஜ கவின் முன்னணி தலைவர்களாக ராஜஸ்தானில் வசுந்தரராஜே சிந்தியாவும் ம.பிரதேசில் யசோதராய் சிந்தியாவும் அவரை அம்மாவின் கட்சியான பாஜகவுக்கு திரும்பி வரும்படி அழைத்து இருந்தனர் அது தற்போது சாத்தியமாகியுள்ளது 1980களில் இவரது தந்தையான மாதவராவ் சிந்தியா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தற்போது அவரது மகனான ஜோதிராதித்ய சிந்தியா மீண்டும் பா ஜ கவில் இனைந்ததன் மூலம் மீண்டும் தாய்கட்சிக்கு திரும்பியுள்ளார்.