சர்வதேச கீதா மஹோத்சவம்

டிசம்பர் 14 அன்று, கீதா ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ஹரியானாவில் உள்ள  குருக்ஷேத்திரத்தில் மெகா ‘சர்வதேச கீதா மஹோத்சவம்’ டிசம்பர் 2 முதல் 19 வரை நடைபெறும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். அம்மாநில அரசு, இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சர்வதேச கீதா மகோத்ஸவம் 2021ஐ முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் குருக்ஷேத்திர தலத்திற்கு சென்றுகொண்டுள்ளனர். சர்வதேச கீதா மஹோத்சவம் 2021’ன் ஒரு பகுதியாக, பகவத் கீதை மற்றும் சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்த ஆன்லைன் போட்டிகள், கருத்தரங்கங்கள், 55 ஆயிரம் மாணவர்கள் இணந்து கீதை ஸ்லோகங்கள் சொல்லும் நிகழ்ச்சி,  2,700க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகள், 75 புகழ்பெற்ற ஓவியர்களின் கீதை, மகாபாரத ஓவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 3.5 லட்சம் வெளிநாட்டினர் இணையவழியாக இதில் கலந்துகொள்கின்றனர்.