சரயூ கால்வாய் திட்டம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என பல ஆண்டுகளாக திராவிட கட்சிகள் கூறி மக்களை மாறி மாறி ஏமாற்றி அரசு பணத்தை வீணடித்து வரும் வேளையில் உத்தர பிரதேசம் சத்தமில்லாமல் அதனைவிட பெரிய திட்டத்தை நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ளது. அதுதான் சரயூ கால்வாய் திட்டம். பிரதமர் மோடி, நேற்று உத்தரப் பிரதேசத்தில், சரயூ கால்வாய் திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். 1978ல், 78.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்டம், அடுத்தடுத்து வந்த அரசுகள் கண்டுக் கொள்ளாததால் கிடப்பில் போடப்பட்டது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் விட்டது, ஆள்பவர்களின் அக்கறையின்மை போன்ற பல காரணங்களால் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ விவசாயிகள்தான். மழைக்காலத்தில் வெள்ளம், வெயில் காலத்தில் வறட்சி என்று விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017ல் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, இத்திட்டம், மத்திய அரசின் பிரதம மந்திரி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பணிகள் முடுக்கிவிடப்பட்டன. வேகமான அரசின் செயல்பாடுகளால் நான்கே ஆண்டுகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தால் 9 மாவட்டங்களில் உள்ள சுமார் 6,200 கிராமங்களும் 14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன்பெறும், 29 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ. 9,800 கோடி. கடந்த 4 ஆண்டுகளில் இதற்காக ரூ. 4,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகிணி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டமும் அடங்கும். இதன் மூலம், நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்த இத்திட்டம் வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எல்லாம் பார்க்கும்போது தமிழர்கள் இன்னும் விழிப்படையவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது.