சந்நியாசிகள் வேட்டையாடப்பட்ட வரலாற்று பாதைகள்

சமீபகாலமாக ஒரு கருத்தினை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள். 700 ஆண்டு காலம் பாரதத்தில் முஸ்லீம் ஆட்சி நடைபெற்றபொழுதும் இந்நாட்டினை இஸ்லாம் நாடாக அவர்கள் ஏன் மாற்றவில்லை ?  அந்த மதத்தினுடைய சகிப்புத் தன்மையும், அமைதியின் மீதுள்ள நாட்டமும் அன்பும் தான் அதற்கு காரணம் என்பதே அவர்களுடைய கருத்து. ஆயிரம் ஆண்டுகால வரலாற்றினை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போன்று அவர்கள் மறைக்க முயற்சிக்கிறார்கள். பாரதம் இஸ்லாம் நாடாக மாறிவிடவில்லையெனில், அதற்க்கு காரணம் லட்சக்கணக்கான மனித உயிர் பலியும், ஆயிரக்கணக்கான சந்நியாசிகளுடைய தியாகமும் தான். ரஜபுத்திரவீரர்களும், மராட்டாவை சேர்ந்த விவசாயிகளும் மலைவாழ் மக்களும், தென் பாரதத்தில் விஜயநகர சாம்ராஜ்யமும், இவர்களுக்கு தலைமையேற்று வழி நடத்திய சர்வசங்க பரித் தியாகிகளான சந்நியாசிகளும் குருமார்களும் ஒருங்கிணைந்து,  அவர்களுடைய சொந்தம் இரத்தம் சிந்தி,  மிக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சுவற்றினை எழுப்பியதால் மட்டுமே, பாரதம் இன்றும் பாரதமாக நிலைகொண்டு விளங்குகின்றது. இந்த தெய்வீக பூமியில் சந்நியாசியை கடவுளாகவே பாவித்தது. ஆனால், அப்படிப்பட்ட சந்நியாசியை வேட்டையாடி கொலை செய்த வரலாறு முஸ்லீம் படையெடுப்புடன் ஆரம்பமானது.

சந்நியாசி வேட்டைகள் ஆரமபமாகின்றது:

     பாரதநாட்டின் மீது முதன்முதலாக படையெடுத்து வந்த முஸ்லீம்களில் முக்கியமானவன், முகம்மது பின் காசிம். சிந்தி மற்றும் மூல்தான் பகுதிகளை கொண்ட நாட்டினுடைய வட மேற்கு பிரதேசமான தாஹிரை கைப்பற்றினான். வைஷ்ணவர்கள் மீதிருந்த வெறுப்பின் காரணமாக புத்த மதத்தை சார்ந்த ஜனங்கள் முகம்மத்  பின் காசிமுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், இரணடு ஆண்டுகளில் அதற்குண்டான கூலியை பெற வேண்டி வந்தது. பாரத்தில் புத்த மதத்தை அழிக்கும் பணியை துவங்கியது முகம்மது பின் காசிம் ஆவார். சாதாரண புத்த நம்பிக்கை கொண்ட மக்களை மட்டுமின்றி, புத்த மதத்தை பரப்பி நிலை நிறுத்திக் கொண்டிருந்த  புத்த சந்நியாசிகளையும் இந்த கூட்டம் தேடிப்பிடித்து கொன்று குவித்தனர். பாரத வரலாற்றில் சந்நியாசிகளை வேட்டையாடிய சம்பவம் அப்படித்தான் அரங்கேறியது.

 புத்த மதத்தை முஸ்லீம் படையெடுப்பாளர்கள் எப்படி அழித்து ஒழித்தனர் என டாக்டர்.அம்பேத்கார் குறிப்பிடுகிறார். ‘ அவர்கள் கோடாலியை வேரை நோக்கி பிரயோகித்தார்கள். அவர்களுக்கு தெரியும் புத்த புரோகிதர்களை (சந்நியாசிகளை) ஒழித்து விட்டால், புத்தமதம் ஒழிந்து விடும் என்று. பாரத்தில் புத்தமதம் எதிர்கொண்டு தோல்வியுற்ற மிக பெரிய விபத்தாக இதை கூறவேண்டும். இஸ்லாம் வீசிய வாள் மிக மிக சக்தியுடன் புரோகிதர்கள் மீது பாய்ந்தது!  புரோகிதர்கள் அழிக்கப்பட்டனர்  அல்லது உயிரை பாதுகாக்கும் பொருட்டு வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடிவிட்டனர். புத்தமத ஜோதியை தொடர்ந்து ஏற்றிக்கொள்ளும் அளவிற்கு யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.’ ( டாக்டர்.அம்பேத்கர்-முழு தொகுப்பு , பகுதி-7 , அத்தியாயம்-5  புத்த மதத்தினுடைய தோய்வும் வீழ்ச்சியும்).  புத்த புரோகிதன் என்று குறிப்பிடுவது புத்த சந்நியாசியை தான். அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தமதத்தின் நெடும் தூண்களாக விளங்கிய சன்னியாசிகளின் இரத்தத்தை இந்த மண்ணில் பாயச செய்து, சன்னியாசிகளின் குருதிப்புனலை உருவாக்கி விட்டு தான், இஸ்லாமியர்களால் பாரதத்திற்குள் புகுந்து வேர் பிடிக்க முடிந்தது.

  தொடர் தாக்குதல்கள்:

   முகம்மத் கஜனி மற்றும் முகம்மத் கோரி ஆகியோர்களுடைய காலங்களிலும் இது தொடர்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற பெரிய தாக்குதல்கள் முகலாயர்களிடமிருந்து தான் வந்தது. இன்று நம் நாட்டிலுள்ள ஒரு பிரிவு முஸ்லீம்களின் போற்றுதலுக்கு உரிய வீர நாயகனாக விளங்குகின்ற அந்நிய படையெடுப்பாளர் பாபர் 1526 -ல் இருந்தே  சந்நியாசிகளை குறி வைத்து கொன்று குவித்தான். அயோத்தி ராமஜென்மபூமி ஆலயத்தை பாதுகாக்கும் பொருட்டு ஏற்பட்ட போராட்டங்களிலேயே எண்ணற்ற சந்நியாசிகள் கொல்லப்பட்டனர்.  பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையினில் வாழ கஷ்டப்பட்டு கொண்டு  பின்தங்கி விட்ட சமுதாயத்தை, மேலே தூக்கி நிறுத்த முயற்சி செய்தவர் நானக் தேவன்.  1469- ல் பிறந்த அவர் உருவாக்கியது தான் சீக்கிய மதம். அவர் மத ஒற்றுமையை அறிவித்தார். இஸ்லாமிய கொள்கைகளும் சேர்த்துக்கொண்டு  மதஒற்றுமையை வலியுறுத்தி அவரால் எழுதப்பட்ட பாடல்கள் குருகிரந்த சாஹிப்பில் குருநானக் தேவனுடையதாக உள்ளது. இஸ்லாமியர்களின் தாக்குதல்களிலிருந்து சமுதாய மக்களையும் சந்நியாசி குருமார்களையும் காப்பாற்றும் பொருட்டாக அவர் அப்படிப்பட்ட ஒற்றுமை கவிதைகள் இயற்றினார். 1539 -ல் குரு நானக் இவ்வுலகை விட்டு சென்றார். தொடர்ந்து வந்த மூன்று குருமார்களும் குரு நானக் அவர்களுடைய உபதேசம் சிரமேற்று,  மத ஒற்றுமையை கடைபிடித்துக் கொண்டு, சீக்கிய மதத்தினை பரப்பவும் உறுதிப்படுத்தவும் பணியாற்றினார்கள். எனினும்  மத குருமார்கள் மற்றும் சந்நியாசிகள் மீதான முகலாயர்களின் தாக்குதலுக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை.

     ஐந்தாவது குரு அர்ஜுனதேவ் சீக்கிய சமுதாயத்தை மிகுந்த சக்தி வாய்ந்த சமுதாயமாக மற்றும் முயற்சியினை கடை பிடித்தார். இது ஆபத்தான விஷயம் என கருதிய முகலாய பேரரசு ஜஹாங்கீர், சீக்கிய நூல்களில் உள்ள இஸ்லாம் கருத்துக்களை நீக்க வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தார். குரு அதற்கு ஒத்துக் கொள்ள மறுத்தார். அவரை மிக கொடுமையாக துன்புறுத்தினர் ஜஹாங்கீர். தீயிலிட்டு சுட்ட உலோக தகிட்டில் அவரை அமர செய்தார். சூடான மணல் தலையில் கொட்டினார். ஐந்து நாட்கள் இந்த துன்புறுத்தல்கள் தொடர்ந்தது. குரு அர்ஜுன் தேவ், ஜகாங்கீரின் உத்தரவுக்கு அடிபணியவில்லை. இறுதியில் அவரை நதியில் மூழ்க வைத்து மூச்சு திணற சாகடித்தார்கள். தொடர்ந்து கொண்டிருந்த சந்நியாசி வேட்டையில் ஜகாங்கீருக்கு கிடைத்த பெரிய மீனாக குரு அர்ஜுன் தேவ் கருதப்பட்டார்.

    இஸ்லாம் அரசர்களின் அச்சுறுத்தலும் கொடுமைகளும் தாங்கமுடியாத அளவை எட்டியது. வாளுக்கு வாள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய ஆறாவது குரு ஹர் கோவிந்த் ஆயுதமெடுத்து போரிட்டார். லட்சக்கணக்கான படைவீரர்களை கொண்ட ஜகாங்கீருக்கு, குரு ஹர் கோவிந்த் ஒரு பொருட்டாக தெரியவில்லை. ஹர்கோவிந்த் சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது காலங்களுக்கு பிறகு, மக்களின் எதிர்ப்பினை தொடர்ந்து அவரை விடுதலை செய்தார். ஜஹாங்கீருக்கு பிறகு வந்த ஷாஜஹான், குரு ஹர் கோவிந்தனுக்கு எதிராக போர் அறிவித்தார். தன்னுடைய மரணம் வரை பல்வேறு இடங்களிலிருந்து ஹர்கோவிந்த் முகலாய சக்ரவர்த்திக்கு எதிராக போரிட்டு கொண்டிருந்தார். அதற்கிடையில், தந்தை ஷாஜஹானை சிறையில் தள்ளி, மகன் ஒளரங்கசீப் சக்கிரவர்த்தியாக முடி சூட்டிக்கொண்டார். தமது சகோதரர் தாரா ஷிகோவிற்கு உதவிய ஏழாவது குரு ஹர் ராயியை சிறைபிடிக்க ஒளரங்கசீப் முயற்சித்தார். ஆபத்தை மணம் பிடித்துக்கொண்ட ஹர் ராய், தமது ஐந்து வயது மகன் ஹர் கிஷனை எட்டாவது குருவாக அறிவித்தார். ஆனால், ஆயுள் பலம் குறைவாக இருந்த ஹர்கிஷன் குழந்தை பருவத்திலேயே நோயுற்று மாண்டு விட்டார். அப்பொழுது ஒன்பதாவது குருவாக தேஜ் பகதூர் நியமிக்கப்பட்டார்.

தேஜ் பகதூரும் மறைந்து விட்டார்:

ஓரங்கசீபின் துன்புறுத்தல்கள் அளவுக்கு அதிகமாகி விட்டதால்  ஹிந்துக்கள் செய்வதறியாது திகைத்தனர். குரு தேஜபகதூர் அனைவருக்கும் ஆறுதல் கூறிக் கொண்டு பாரதம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.  பிராமணர்களை மதம் மாற்றுவதில் ஓரங்கசீப் அதிகம் கவனம் கொடுத்தார். ஹிந்துஸ்தானை எளிமையாக தன்வயப்படுத்த அதுதான் சிறந்த வழி என்று அவருடைய  ஆலோசனை குழுவிலுள்ள சில பேர்கள் போதித்தார்கள். புத்த மதத்தை அழித்து விட்டதை போன்று, மத புரோகிதர்களை நாம் முஸ்லீம்களாக மாற்றி விட்டால், ஹிந்து மதத்தை வேருடன் அழித்து விடலாம் என ஓரங்கசீபும் நம்பினார். குரு தேஜபகதூர் சமுதாய பிரதிநிதிகளை ஒன்று திரட்டி கூட்டம் நடத்தினார். பிராமணர்கள் உட்பட எல்லா ஜாதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், ஓரங்கசீப் ஹிந்துக்கள் மீதும், குறிப்பாக பிராமணர்கள் மீதும் நடத்திக் கொண்டிருக்கின்ற தாக்குதல்கள் பற்றி விரிவாக பேசினார்கள். இறுதியாக பேசிய குரு தேஜபகதூர் கூறினார்: ‘ நாங்கள் மதம் மாற தயாராக உள்ளோம், ஆனால் அதற்க்கு முன் நீங்கள் தேஜ் பகதூரை இஸ்லாம் மதம் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று ஓரங்கசீபிடம் கூறுங்கள் ! மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்’. இந்த விஷயத்தை அறிந்த ஓரங்கசீப், குரு தேஜ் பகதூரை கைது செய்ய உத்தரவு போட்டார்!  தன்னுடைய மகன் கோவிந்தா ராயியை பத்தாவது குருவாக அறிவித்து விட்டு, மஹா குரு மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுடன் தில்லியை நோக்கி புறப்பட்டார். இடையினில் தானேயில் உள்ள  கவர்னர், குருவை கைது செய்து சக்கிரவர்த்தியின் முன் ஆஜர்படுத்தினார் ! மதம் மாற மறுத்தால் கொன்று விடுவேன் என குருவை சக்ரவர்த்தி மிரட்டினார். காலம் முழுவதும் யாரும் உயிரோடிருக்க முடியாது என்று குரு பதிலளித்தார். சரி, சில அற்புதங்களை காட்டி விட்டால் விடுதலை அளிப்பதாக கிண்டல்,  அற்புதம் நிகழ்த்துவது கடவுளால் மட்டுமே முடியும் என்று பகதூர் அமைதியாக கூறினார். என்ன கூறியும் மதம் மாற மறுத்துவிட்ட  தேஜ் பகதூரை கண்ட ஓரங்கசீபின் கோபம் அதிகரித்தது. 1675 நவம்பர் 1 ந் தேதி அவருடன் வந்த மூன்று சீடர்களையும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார். பாய் மதிதாஸ் என்ற சீடரின் கையும் காலும் கட்டிப்போட்டு கண்களை நோண்டி எடுத்து துடிதுடிக்க கொன்றனர். மற்றொரு சீடரான பாய் ஸதீ தாஸின் உடல் முழுவதும் எண்ணத் துணியால் சுற்றி எரியவிட்டு கொன்றனர். மூன்றாவது சீடர் பாய் தயாள் தாஸை, கொதிக்கின்ற நீரில் மூழ்க செய்து கொன்றனர் !   ‘இதெல்லாம் பார்த்து விட்டு இன்னுமா மதம் மாற மறுக்க போகிறாய் ?’  என்ற முஸ்லீம் சக்ரவர்த்தியின் கேள்விக்கு, முகத்தடித்தார் போல் குரு பதில் கூறினார்:  ‘இறைவனின் விருப்பம் எப்படி இந்த உடலை அழிக்க வேண்டுமென்று உள்ளதோ, அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன் !’. இத்தனை நடந்தும் மதம் மாற ஒத்துக்கொள்ளாத அந்த கிழட்டு மனிதரை சூரியன் அஸ்தமித்த பிறகு கழுத்தை அறுத்து கொன்று விட சக்கரவர்த்தி உத்தரவிட்டார். நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில், ஹிந்து சமுதாயத்தினுடைய புனித குருவை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டது. (குரு தேஜ் பகதூர் – ராம் சாத்தே, பக்கம் 13)

   கழுத்திலிருந்து வேறுபட்ட தலையை கீழே வீழ்ந்து விடாமல் யாரோ பிடித்து விட்டு இருளில் மறைந்து கொண்டது. இப்படி ஒரு நிகழ்வினை சற்றும் எதிர்பார்க்காத வீரர்கள் அந்த நபரை தேடி ஓடினார்கள். கிடைத்த வாய்ப்பில் உடலையும் கடத்திக்கொண்டு சிலர் மின்னல் வேகத்தில் தப்பித்து விட்டனர். அந்த சரீரம் ஒரு வீட்டிற்குள் எடுத்து சென்று, அந்த வீட்டுடன் சேர்ந்து அக்னி தேவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டார்கள். அது தான் இன்று தரிசனம் செய்கின்ற ராகாப் கஞ்சு குருத்துவாரா !   சிரம் அனந்தப்பூருக்கு எடுத்து வந்து முறைப்படி எரிக்கப்பட்டது.  தொடர்ந்து குருவாக பொறுப்பேற்றுக்கொண்ட கோவிந்தா ராய் என்ற குரு கோவிந்த சிம்மனால் பாரதத்தை பாதுகாக்க ஒரு புதிய முறை உருவாக்கப்பட்டது. அதற்க்கு பெயர் ‘கல்ஸா பந்த்’ .  அவர் சீக்கிய சமுதாயத்தை ராணுவமாக மாற்றினார். இன்று சீக்கியர்கள் அணிந்துகொண்டுள்ள வித்தியாசமான  உடையும், தலைப்பாகையும், தாடியும், சீப்பும், உறுதிமொழியும் என எல்லாமே அன்றைய தினத்தில் முகலாயர்களோடு போரிடவும், பாரதத்தை சுதந்திரம் அடைய செய்வதற்குமாக ஏற்படுத்தப்பட்டது.  நிரந்தரமான போராட்டத்தில் மூத்த மகன் அஜித் சிங் மரணப்பட்டு விட்டான் !  ஏழு வயதும், ஐந்து வயதும் உள்ள இரண்டு மகன்களை ஓரங்கசீபின் தளபதி வஸீர் கான்  சிறைபிடித்தான். மதம் மாறுங்கள் என கட்டளை போட்டான். முடியாது என்று வீறுடன் கூறிய அந்த இரண்டு குழந்தைகளையும் உயிரோடு சமாதி கட்டி, மூச்சு கிடைக்காமல் திணறித்துடிக்க வைத்து  மரணமடைய செய்தான்.  இந்த செய்தியை கேட்ட குருவின் தாயார், மூர்ச்சையாகி கீழே விழுந்து இறந்து விட்டாள். பெருத்த காயமடைந்த கோவிந்தசிம்மனுக்கு, கல்ஸா பந்தின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு,   தன்னுடைய தங்குமிடம் மராட்டாவுக்கு மாற்ற வேண்டியதாயிற்று. நந்தேட் என்ற இடத்தில் முகலாய ஒற்றர்களால்  குரு கோவிந்த சிம்மன்  1708 அக்டோபர் 7 ந் தேதி மரணத்தை தழுவினார்.

  பாரதத்தில் மிகவும் சக்தி வாய்ந்த முகலாய பேரரசுகள் ஆட்சி நடத்திய பொழுது தான், அமைதிக்கும் அன்பிற்கும் பேர் பெற்று விளங்குவதாக கூறுகின்ற இந்த மதத்தை சேர்ந்தவர்கள் மிகவும் கருணையுடன் இந்த மஹா குருமார்களையும்  அவருடைய சீடர்களையும் எண்ணற்ற மற்ற சந்நியாசிகளையும் கொன்று குவித்தனர். பாரத வாசிகளான மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையும் தேசப்பற்றும் ஒழுக்கமும் வளர்த்து, அந்நிய ஆட்சியை எவ்விலை கொடுத்தும்  அகற்றி விடவேண்டும் என்ற சுதந்திர உணர்வினை பரப்பிய அந்த குரு மகான்களின் பெரும் தியாகங்களின் விளைவாக தான்,  இன்றைக்கும் இந்த பாரதம் ஹிந்துஸ்தானாக நிலவி வருகின்றது என்பதை நாம் புரிந்து கொள்வோமாக. எழுநூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்த  அந்நியர்களின் கருணையால் இங்கே ஹிந்துவும், ஹிந்து கலாச்சாரமும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற வடி கட்டின பொய்களில் ஏமாறாமல் இருப்போம்.

முகலாய ஆட்சிக்கு பின்:

முகலாயர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பாரதத்தில் பிரிட்டீஷ் ஆட்சியானது ஆரம்பமாயிற்று. வங்காளத்தின் மக்கள் என்ற பேரில் அறியப்பட்ட வங்காளத்தை சேர்ந்த சந்நியாசிகள் தான் பிரிட்டீஷ் ஆட்சிக்கெதிராக முதன் முதலில் போர் அறிவித்ததார்கள். 1882 -ம் ஆண்டு வெளியிடப்பட்ட பங்கிம் சந்திர சட்டர்ஜீ அவர்களின் ஆனந்தமடம் என்ற வங்காள காவியமும், அதில் உள்ள வந்தேமாதரம் பாடலும் சந்நியாசிகளின் தியாகத்தை அடிப்படையாக உருவாக்கப்பட்டதே. பல ஆண்டுகள் நடைபெற்ற அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சந்நியாசிகள் தங்களது உயிரை பலி கொடுத்தார்கள். கிராமம் கிராமங்களாக சென்று சுதந்திர வேட்கையை கிராம மக்களிடையே ஒங்க செய்தனர் இந்த சந்நியாசிகள்.  கிலாபத் போராட்டத்தின் போது, மீண்டும் சந்நியாசியை குறி வைத்து தாக்கினார்கள். சுவாமி.ஷ்ரத்தானந்தா அவர்கள் சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றியவர். சமுதாய மறுமலர்ச்சிப் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், கேரளாவிற்கு வந்து வைக்கம் சத்தியாகிரஹத்தில் பங்கு கொண்டவர் ஆவார். கிலாபத் கலவரத்தை தொடர்ந்து கேரளாவில் மாப்பிள கலவரம் என்ற பெயரில் மலபார் பிரதேசங்களில் அப்பாவி ஹிந்துக்களை முஸ்லீம்கள் கொன்று குவித்தார்கள். ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை முஸ்லீமாக மதம் மாற்றம் செய்தனர். சுய விருப்பமின்றி மதம் மாறி முஸ்லீம்களாக வாழ்ந்து கொண்டிருந்த சகோதரர்களை குடும்பத்துடன் தாய்மதத்திற்கு திரும்ப அழைத்து கொண்டு வரும் நிகழ்ச்சிகளை சுவாமி.ஷ்ரத்தானந்தா அவர்கள்  நடத்தினார்.  ‘தாய்மதம் திரும்புவோம்’  என்ற பெயரில் ஒரு அலுவலகத்தையே அவர் ஆக்ரா மாநகரில் ஆரம்பித்தார். ஆக்ரா,பரத்பூர்,மதுரா போன்று பல்வேறு ஊர்களிலும் கட்டாயமாக மதம் மாற்றி முஸ்லீம்களாக வாழ்ந்த 5 லட்சம் ரஜபுத்திரர்களை அவர் தாய்மதத்திற்கு திரும்ப அழைத்து வந்தார். இது ஹிந்துக்களிடையே மிகுந்த உற்சாகத்தினையும் புது தெம்பையும் ஏற்படுத்தியது. சுவாமி.ஷ்ரத்தானந்தா உலகப்புகழ் பெற்று கொண்டிருந்தார். முஸ்லீம் வெறியன் அப்துல் ரஷீத் என்ற இளைஞனால் 1926 டிசம்பர் 23 அன்று அவர் சுட்டு கொல்லப்பட்டார். இவரை உயிருடன் விட்டு வைத்தோமானால் தங்களுடைய கூடாரம் மிக விரைவிலேயே காலியாகி விடும் என்ற அச்சம் கொண்ட அன்பு மதத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தீவிரவாதி முஸ்லீம் அந்த அப்துல் ரஷீத்.

சுதந்திரத்தி ற்கு  பிறகு :

 சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற பெரிய நிகழ்வு, 1966  நவம்பர் 7 ந் தேதி டெல்லியில் பசுவதை தடுப்புசட்டம் கோரி லட்சக்கணக்கான ஹிந்துக்களும் சந்நியாசிகளும் பாராளுமன்றம் முன் ஒன்று திரண்டபொழுது, அன்றைய பிரதமர் திருமதி.இந்திரா காந்தியின் உத்தரவினை ஏற்று, அவர்கள் மீது கண்ணீர் புகை பாய்ச்சி, உடனேயே துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். அந்த கொடும் தாக்குதல்களில் எண்ணற்ற சந்நியாசிகளும் கோவ்(பசு)பக்தர்களும் கொ ல்லப்பட்டனர். அரசாங்கம்  350 பேர் இறந்து விட்டதாக அறிக்கை வெளியிட்டது. எனினும் இறப்பு எண்ணிக்கை ஐந்தாயிரம் தாண்டியிருக்கலாம்  என பல்வேறு கருத்துக்கள் வெளியாயின. பசுவை பாதுகாக்கும் போராட்டத்தில் கொல்லப்பட்ட பெயர் விபரம் தெரியாத சந்நியாசிகள் நூற்றுக்கணக்கானவர்கள். ஆக, முஸ்லீம்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அடுத்து காங்கிரஸ் இந்த மாபாதக செயலில் இறங்கியது.

அடுத்ததாக, பாரதத்தினுடைய வடகிழக்கு பிரதேசங்களில் கிறித்துவ சபையும் கம்யூனிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து  சந்நியாசியை ஒழித்துக்கட்ட கூட்டு முயற்சியில் இறங்கியதால் சுவாமி.லட்சுமணானந்தா சரஸ்வதி கொலை செய்யப்பட்டார்.   பல ஆண்டுகாலமாக ஒரிசா மாநிலத்தில் உள்ள  மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்க்காக தமது வாழ்வினை சமர்ப்பித்தவர் சுவாமி.லட்சுமணானந்தா சரஸ்வதி அவர்கள். மலை வாழ் மக்களுடைய கல்வி,ஆரோக்கியம்,மற்றும் பொருளாதார விஷயங்களில் பெரும் மேம்பாடுகள் செய்து அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியது,  கிறித்துவ மிஷனரிகளை கோபம் கொள்ள செய்தது. 84 வயதுடைய ஸ்வாமிஜியையும் அவருடைய நான்கு சீடர்களையும் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

        தென் பாரதத்தில், குறிப்பாக தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் சந்நியாசி வேட்டையில் ஈடுபட்டவர்கள் திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் தான் என்று காணலாம். அவர்களுக்கு ஒத்தாசை செய்தோ அல்லது இணைந்தோ முஸ்லீம் மற்றும் கிறித்துவ சமுதாய வெறியர்களும் இருந்தார்கள் என்பதை ஒதுக்கி விட முடியாது. காஞ்சி மகான் ஸம்பூஜ்ய.ஜெயேந்திர ஸ்வாமிகளை கொலை செய்யவில்லையே தவிர, கொலைக்கு ஒப்பான மானபங்கம் நடத்தியதை மறக்க முடியுமா..?  சேலத்தில் ராமர் சிலைக்கு செருப்புமாலை அணிவித்து தி.க.வினர் ஊர்வலம் நடத்திய பொழுது, தன்னந்தனியாக தட்டி கேட்ட சேலம் ராமஸ்வாமி கூட காவியணியாத ஒரு சந்நியாசியாக வாழ்ந்து வந்தவர். அவரையும் அவருக்கு உதவியாக இருந்த, படித்து பட்டம் பெற்று, தம் வாழ்வினை இந்நாட்டிற்கு சமர்ப்பணம் செய்த மற்றொரு துறவி பத்மநாபனையும் பெருமாநல்லூருக்கருகில் சாலை விபத்து என்ற பேரில் கொலை செய்து விட்டார்களே ! தேசீய அமைப்பான ஆர்.எஸ்.ஸில் பிரச்சாரக் ஆக சுய விருப்பத்துடன் பணியாற்றுகின்ற அத்தனை பேர்களும் சன்யாசிகளுக்கு ஒப்பானவர்களே. அந்த பட்டியலில் முதலாவதாக விளங்கி கொண்டிருப்பவர் வீரத்துறவி.இராமகோபாலன். கோயமுத்தூரில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு ரயிலேறி மதுரைக்கு விடியற்காலை வந்திறங்கிய இராமகோபாலனை, அதே ரயிலில் வந்திறங்கி கண்மூடித்தனமாக பட்டாக் கத்தியால் தலையில் பல வெட்டுக்கள் வெட்டி ,தலையை பிளக்க செய்து விட்டதை உறுதி செய்து அங்கிருந்து தப்பி ஓடிய  பாஷாவுக்கும் இராமகோபாலனுக்கும் சொத்து தகராறு இருந்ததா? அல்லது குடும்ப பிரச்சினையா ?  இல்லை, இந்த துறவி உயிரோடிருந்ததால் எங்களுடைய அன்பு மதத்திற்கு ஆபத்து என்று புரிந்து, திட்டமிட்டு நடத்திய கொலை வெறி தாக்குதல் அது. கடவுளின் திட்டம் வேறாக இருந்ததால் இராமகோபாலன் இன்றும் அந்த வெட்டு காயங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் பிரிவான DYFI -யில் தீவிரமாக பணியாற்றிய கேரளா கண்ணனூரை சேர்ந்த  ஒரு இளைஞன், வேதாந்தம் கற்றுக்கொள்ள துவங்கினான்.  நாட்கள் செல்ல செல்ல அவன் சந்நியாசி ஆகி விட்டான். தமது கிராமத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியருக்கு அறிவும் பண்பும் போதித்து வந்தான். வினு சுவாமி என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்த சந்நியாசியின் ஆசிரமத்தை, அவருடைய பூர்வாசிரம நண்பர்களான கம்யூனிஸ்டுகள் பல முறை தாக்கினார்கள். அங்கிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை தீக்கிரையாக்கியதுடன் சாமி படங்களையும் சிலைகளையும் தூக்கி எறிந்தார்கள். ஒரு நாள் நகரத்திற்கு வந்திருந்த அந்த சந்நியாசியை பொதுமக்கள் முன்னாடி அடித்து உதைத்து அவனுடைய தாடியும் முடியும் வெட்டினார்கள்.

      கேரளாவில் உள்ள அம்மா அம்ருதானந்தமயீ தேவி அவர்களுடைய பிரதான ஆசிரமத்திற்க்கெதிராகவும், ஆசிரமத்தை சேர்ந்த  சந்நியாசிகளுக்கு எதிராகவும், அம்மா பெயரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு எதிராகவும் திட்டமிட்டு பல்வேறு பொய் குற்றசாட்டுகளை கூறி வந்தனர் கம்யூனிஸ்டுகளும் அவர்களுக்கு சாதகமான ஊடகங்களும்.   கோழிக்கோடு மாவட்டம் கொளத்தூர் என்ற சிறிய கிராமத்தில் ஆசிரமம் அமைத்து தனது பணிகளை நடத்திக் கொண்டிருப்பவர் சுவாமி.சிதானந்தபுரி அவர்கள். கேரளா மாநிலம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் வெளி நாட்டிற்கும் சென்று இவர் ஆன்மீக தேசீய கருத்துக்களை பரப்பி வருகிறார். இவருக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பல்வேறு பொய் புகார்களை கூறி, இவரை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்த முயற்சித்தனர். இடுக்கி மாவட்டத்தில் மலைவாழ் மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்ற ராமானந்தா ஸ்வாமியையும் சாலையில் தடு த்து  நிறுத்தி தாக்கினார்கள். மலைவாழ் மக்களுக்கு தூய்மை பற்றிய விழிப்புணர்வும், அத்துடன் அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வியும் பண்பும் போதிப்பது தான் இவர் செய்த தவறு. அவரையும் கம்யூனிஸ்டுகள் கிறுத்துவர்களுடன் இணைந்து மிரட்டி பார்த்தனர். ஒன்று திரண்ட ஹிந்துக்களின் குரல் ஓங்கி ஒலித்து கண்டனம் தெரிவித்ததால் மேற்கூறிய எந்த முயற்சிகளும் கேரளாவில் தாற்காலிகமாக வெற்றியடையவில்லை.

             இப்படி பல நூறாண்டுகளாக சந்நியாசிகள் மீது திட்டமிட்டு நடைபெற்ற வேட்டைகளில் கடைசியாக ஒரு உதாரணம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாலகர் மாவட்டத்தில் நாம் கண்டோம். அங்கே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் (NCP ), சிவசேனா கட்சிகள் சேர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அம் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு மிக்க ஒரே ஒரு பகுதி எதோ,  அந்த பகுதியில் தான் இந்த கொடிய மிருகத்தனமான செயல் நடைபெற்றிருக்கிறது.  கல்பவிருக்ஷ கிரி மகாராஜ், சுஷில் கிரி மஹாராஜ் மற்றும் அவர்களுடைய தாற்காலிக கார் ஓட்டுனரையும் மனித இரத்தம் குடிக்க வெறிகொண்ட பேய்களை போன்று  இந்த புரட்சிகர கும்பல் வெறித்தனமாக தாக்கி இஞ்சு இஞ்சாக அடித்தே கொன்று விட்டனர். அதில் ஒரு சந்நியாசிக்கு வயது 70 -ஐ தாண்டி விட்டது. அவர் கையெடுத்து தன்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சிய போதும் கூட, சுமார் 30 காவல்துறையினருக்கு முன்னாலே இந்த கொடுமையை செய்ய அவர்களுக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. அதற்க்கு ஒரே காரணமாக உள்ளது இவர்கள் ஹிந்து சந்நியாசிகள் என்பது மட்டுமே.

              சந்நியாசியை பொறுத்த மட்டில் அவருக்கு எதிரியே கிடையாது. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் செடி கொடி மரங்களும் புழு பூச்சியும்  கூட பரம்பொருளின் பிரதி பிம்பமாக சந்நியாசி பாவிக்கிறார். அதர்மம் தலை தூக்கி, தர்ம வாழ்விற்கு ஆபத்து வரும்பொழுது மட்டுமே அவர்கள், அதர்மமியை அழிக்க விரும்புவார்கள் ! அதுவும் சத்ரு மனப்பான்மையோடு இல்லை, மித்ரதா பாவத்துடன் மட்டுமே. அப்படிப்பட்ட சந்நியாசியை ஏன் வேட்டையாடி கொல்ல துடிக்கிறார்கள் ? சந்நியாசிகளை எதிரியாக நினைத்து பயப்படுகின்றவர்கள் யார் யார் ?

     சந்நியாசிகளை கொன்று குவித்தது யார் ? அவர்களுடைய பின்னணி என்ன என்பதை பார்க்கும்பொழுது  மேலே உள்ள கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். பாரதம் என்ற இந்த சனாதன ராஷ்ட்ரம், மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ, அல்லது அதிகார ரீதியாகவோ தங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற பேராசை உடையவர்கள் தான் இந்த வேட்டையை மேற்கொண்டுள்ளனர். தங்களுடைய  இலக்கினை அடைய தடையாக இருப்பது சந்நியாசிகளும் குருமார்களும் என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது .

      பாரத சமுதாயத்தின்  தார்மீக தலைமையானது அரசாங்க அதிகாரிகளுக்கோ மற்ற தலைவர்களுக்கோ ஏன் பழைய காலங்களில் அரசரிடமோ கூட இருந்ததில்லை.  சர்வசங்கபரித் தியாகிகளாக உள்ள சந்நியாசிகள் அல்லது குருமார்கள் தான் அந்த பொறுப்பில் எக்காலமும் வீற்றிருந்தார்கள். அவர்களுக்கு சுயநலமோ, தனது குடும்பத்தினர் அல்லது வேண்டியவர்கள் என்ற பாகுபாடோ இல்லை. தேவைகள் இல்லை! தியாகமும் தொண்டும் அவர்களை மகான்களாக மாற்றுகின்றது.  சமுதாயத்தினுடைய காவலக்காரர்களாக கண்ணில் எண்ணையூற்றி விழித்துக் கொண்டிருப்பவர்கள் சந்நியாசிகள் !

    அப்படிப்பட்ட சந்நியாசிகளையும் குருமகான்களையும் அழித்து விட வேண்டும். அல்லது அவர்கள் மீதுள்ள நம்பிக்கையும் மதிப்பு  – மரியாதையும் சிதைத்து விட வேண்டும். அபொழுது மட்டுமே ஹிந்துஸ்தானை அடிபணிய செய்ய முடியும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் கடந்த 1300  ஆண்டுகளாக அவர்களும் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கு சில வெற்றிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என கூற முடியாது. எனினும், முழு பாரதத்தையும் அப்படி செய்து விட ஒருபொழுதும் இந்த சக்திகளா ல் முடியவே முடியாது. காரணம்,  பாரதம் தர்மபூமி! இது கர்ம பூமி மோக்ஷ பூமி தியாக பூமி ! சக்ரவர்த்தியோ, அரசியல் தலைவர்களோ இந்த பூமியின் போற்றுதலுக்குரிய, வழிபாட்டிற்குரிய ஆராதனா பாத்திரங்களாக முடியாது ! அந்த இடத்தில் பாரத வாசிகளுடைய இதய கோவில்களில் கடவுளுக்கு இணையாக வீற்றிருப்பவர்கள் தியாகிகளான சந்நியாசிகளும் , ரிஷி குருமார்களும் மட்டுமே. ஒருத்தர் வீழ்ந்து விட்டால், அங்கிருந்து ஓராயிரம் பேர்கள் எழுந்து விடுவார்கள் ! ஒருத்தரை வெட்டி சாய்த்து விடினும்,  துப்பாக்கி குண்டுகளால் துளைத்து விடினும் அங்கிருந்து ஆயிரம் யுவ யோகிகள் முளைத்து தளிர் விடுவதை காணலாம். அது இந்த மண்ணிற்கே உரிய, இந்த மண்ணிற்கு மட்டுமே உரிய விசேஷத் தன்மையாகும் ! அந்த ஒரே ஒரு காரணத்தால் மட்டும் தான்,  உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடும் நாகரீகமும் ஜனங்களும்,  மத – புரட்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் அழிந்து விட்ட போதும், பாரதம் சனாதன தர்மத்தின் பாதுகாவலனாக, சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. சந்நியாசிமார்களை அழித்து விட்டால் இதை வென்றுவிடலாம் என்ற மருட்சியில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.   இந்த விஞ்ஞான யுகத்திலும் கூட, சந்நியாசிகள் அதிகம் அதிகம் உருவாகி கொண்டிருக்கின்ற வேதியியல் புரிந்துகொள்ள முடியாத முட்டாள்கள்,  ஒரு வேளை மீண்டும் இந்த மாதிரி தாக்குதலை தொடரலாம்.  எனினும் இந்த தெய்வீக பூமியில் காவியுடையினர் பெருகிக் கொண்டே இருக்கும்.

 அன்புடையீர், பணிவான வணக்கங்கள் !

 சந்நியாசிகளுடைய துர் மரணம் நமக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. காவியணிந்த துறவிகளும் குருமார்களும் இல்லாத பாரதம், ஒரு பொழுதும் பாரதமாக இருக்காது. இந்தியா ஆக இருக்கலாம். பல்லாயிரக்கணக்கான சந்நியாசிகளும் குருமார்களும் நமது தேச நலனுக்காக இந்த மண்ணில் தங்களது உதிரங்களால் அபிஷேகம் செய்துள்ளது. அத்தனை பேர்களுக்கும் நமது சாஷ்டாங்க பிராணாம் சமர்ப்பிப்போமாக.

ஈரோடு ராஜன்.

One thought on “சந்நியாசிகள் வேட்டையாடப்பட்ட வரலாற்று பாதைகள்

Comments are closed.