இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி : மத்திய அரசு அறிவிப்பு இது இந்தியாவின் கொரோனா கால நடவடிக்கையில் மிகபெரிய வெற்றி, ஆம் ஒவ்வொரு நாடும் அமெரிக்க பைசர் நிறுவணம், சீன நிறுவணம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் என வெளிநாட்டு மருந்துக்கு கையேந்தி நிற்கின்றன. அதுவும் பல்லாயிரம் கோடி பணத்துடன் நிற்கின்றன. ஆனால் அருமை இந்தியா அதில் வெற்றிபெற்று வெளிநாட்டுக்கு பணத்தை வாரியிறைக்காமல் தன்னை தற்காத்து கொண்டது. இந்திய வரலாற்றில் இது புதிது, நிச்சயம் புதிது. ஒரு சிக்கலான நேரத்தில் தேசம் சரியான வழியினை கண்டிருக்கின்றது.
இதற்கு காரணமான இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி கொண்டிருக்கின்றார், ஆம் உலக விஞ்ஞான கழகமும் இந்திய மருந்தினை தரமானது என ஒப்புகொண்டிருக்கின்றது. இது தடுப்பு மருந்து மட்டுமே அதாவது வருமுன் காக்கும் வகை மருந்தே, அது மட்டும்தான் இப்பொழுது உலகில் சாத்தியம். மிக பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இது உடனே எல்லோருக்கும் வழங்கபடுவது சாத்தியமில்லை எனினும் சில மாதங்களில் எல்லோருக்கும் வழங்கபடும். முதல்கட்டமாக மருத்துவர்கள் உள்ளிட்ட கள பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு இது வழங்கபடும் என இந்திய அரசு அறிவித்துள்ளது
உண்மையில் இந்தியாவின் சீரம் நிறுவணம், பாரத் பயோடெக் நிறுவணமும் 2019ம் ஆண்டின் இறுதியிலே இதற்கான ஆராய்ச்சியில் இறங்கின, அதற்கு உத்தரவிட்டது இந்திய அரசு என்பது குறிப்பிடத்க்கது. உலக அளவில் மிகபெரிய சாதனைகளில் ஒன்றினை செய்து வல்லரசுகளுக்கு இணையாக தன்னை நிறுத்தியிருக்கின்றது இந்தியா அந்த இந்தியாவினை மோடி வழிநடத்துகின்றார், இதனால் உலகில் மிகசிறந்த தலைவர்களில் ஒருவராக, வலுவான தலைவராக மோடி கருதபடுகின்றார். உலக அரங்கில் வலுவான நாடாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கின்றது, மோடி தன் கடமையினை மிக சரியாக செய்து கொண்டிருகின்றார்