கேரள தேவசம்போர்டில் 2018 முதல் 2019 வரை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் ஜெயபிரகாஷ். இவர், நிலக்கல்லில் உள்ள கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்துக்கு பொறுப்பேற்றிருந்த இவர், அதற்கு வாங்கிய 30 லட்சம் மதிப்பிலான காய்கறிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் ஒரு கோடி ரூபாய் பில் கேட்டுள்ளார். மேலும் பல போலியான பில்களை தயாரித்து, சுமார் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். காய்கறி சப்ளை செய்த ஒப்பந்ததாரருக்கு ரூ. 8 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணையில் முன்ஜாமீன் கோரி ஜெயபிரகாஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் இரண்டு குற்றவாளிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.