பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னதை சட்டமாக்கி உள்ளது – நம்பி நாராயணன்

இந்தியா  முழுக்க எந்தவிதமான  போராட்டமும் இல்லைஅது பொய் .  அசாமில் நான்கு மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் ஐந்து மாவட்டங்களிலும் டெல்லியில் ஒருசில குறிப்பிட்ட இடத்திலும்  ஆம் ஆத்மியின்  முஸ்லிம் எம் எல் ஏ இருக்கும் இடத்திலும் மட்டுமே கலவரம் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் மதிய அரசின் அலுவலகங்கள் அதாவது வங்கிகள் போஸ்ட் ஆபீஸ் , பாஸ்போர்ட் அலுவலகங்கள் ,ரயில்நிலையங்கள் டெலிபோன் ஆபீஸ் போன்றவற்றின்மீது திட்டமிட்டு கலவரக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அவர்கள் ஏன்மாநில அரசின் அலுவலகங்கள் மீது வன்முறையில் ஈடுபடவில்லை. அதனால் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறையே இது. இந்த திட்டமிட்ட வன்முறையை கண்டு அரசு அச்சம் கொண்டு சட்டத்தை திரும்ப பெரும் என்று கலவரக்காரர்கள் நினைக்கிறார்கள் ஆனால் மத்திய அரசு தெளிவாக உள்ளது எந்த அச்சமும் படாது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு தெரியும்.

இந்த பிரச்னை  1947 க்கு முன்னாலே இருந்தே இருக்கிறது. அதை சரிசெய்யும் நோக்கில்தான்  இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  நமது அரசாங்கம் தான் இந்த பிரச்சனையை சரி செய்துள்ளது. காங்கிரஸ் இதனை சரிசெய்ய முயற்சி செய்யவே இல்லை. பாஜ க தனது தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியுள்ளதோ அதனைத்தான் செய்துள்ளது. அதற்காகத்தான் மக்கள் வாக்களித்து இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். நாடுமுழுக்க கிளர்ச்சி என்பது பொய்யான தகவல். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அதாவது சென்னையில் லயோலா  டெல்லியில்   ஜாமியமில்லிய போன்ற சிறுபான்மை கல்வி நிருவனங்கள்தான் இதனை ஊக்குவிக்கிறது. நேற்று சுப்ரீம் கோர்ட் மிக தெளிவாக சொல்லியுள்ளது பொதுசொத்திற்கு சேதம் விளைவிக்கும் போராட்டத்தை நிறுத்திவிட்டு என்னிடம் வாருங்கள் வழக்கை எடுத்து கொள்கிறோம் என்று சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது . .