சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரம் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களில் முதற்கட்டமாக 360 குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு தற்போது பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன்படி, 40 கோடி ரூபாய் மதிப்பில் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க புதிய முகாம்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.