தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பரூக் அப்துல்லா ஒமர் அப்துல்லா இருவரும் பொது பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை கண்டித்து, உண்மை என்னவென்று தெரியாமல் எழுதிக் கொடுத்ததை கண்டன அறிக்கையாக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ‘‘ஜனநாயகத்திற்கு கைவிலங்கு, கால்விலங்கு போடும் நிகழ்வு’’ கருத்து சுதந்திரத்தில் மீதான கொடூரமான தாக்குதல் -போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பா.ஜ.க.வின் மீது சேற்றை வாரியிறைக்கும் காரியத்தையும் செவ்வனே செய்துள்ளார்.
அரசியல் அரிச்சுவடியும் தெரியாமல், காஷ்மீர் வரலாறும் தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளார். இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும். ஒன்று காஷ்மீர் மாநில முன்னேற்றத்திற்காக அப்துல்லா குடும்பம் செய்தது என்ன? இரண்டாவது அப்துல்லாவின் குடும்பமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பதும், பல நேரங்களில் பிரிவினையை வலியுறுத்தியவர்கள் தான். பிரிவினைக்காக கட்சியை துவங்கிய தி.மு.க. அப்துல்லாவை ஆதரிப்பதில் ஆச்சரியம் கிடையாது. ஆனாலும் ஸ்டாலினின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது மட்டுமில்லாமல், பொது மக்களை திசை திருப்பும் செயலாகும்.
முதலில் பொது பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். 1953-ல் நேரு பிரதமராக இருந்த போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என கொண்டு வரப்பட்ட சட்டம். மிருகத்தனமான சட்டம் என இதை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை வைத்துக் கொண்டு ஸ்டாலின் விமர்சனம் செய்வதுதான் கூத்து. இந்த சட்டத்தின் மூலம் தான் காஷ்மீர் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, கொடைக்கானலில் சிறை வைக்கப்பட்டார் என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா? ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்காமல், வன்முறை, பயங்கரவாத தாக்குதல், பிரிவினைவாதத்திற்கு தூபம் போட்டவர்கள் அப்துல்லாகளும், மெஹபூபாவும் என்பதை மறந்து விடக்கூடாது.
2004 முதல் 2014 வரை மத்தியில் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தி.மு.க.வினர். இந்த பத்தாண்டு காலத்தில் பொது பாதுகாப்ப சட்டத்தை பயன்படுத்தி காஷ்மீரில் நடந்த சில சம்பவங்களை பார்க்க வேண்டும். 2010ல் கலவரத்தை தூண்டியதாக வக்கீல் சங்கத்தின் தலைவர் மியான் அப்துல் கயூம், ஜனநாயக விடுதலைக் கட்சியின் தலைவர் சபீர் ஷா கைது செய்யப்பட்டார்கள். ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. இது மிருகத்தனமாக செயல் என வில்லை. 2010ல் பேச, மிர்வாய்ஸ் காசீர் யாசிருக்கு எதிரான பொது பாதுகாப்பு சட்ட தடுப்புக்காவலை உயர் நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் “இஸ்லாமாபாத்தில் (அனந்த்நாக் மாவட்டம்) நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தல்களில் யாசிர் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. வரவிருக்கும் அமர்நாத் யாத்திரையையும் தொந்தரவு செய்யலாம். என்ற அடிப்படையில் ஒரு புதிய தடுப்பு உத்தரவு கோரப்பட்டு, கைது செய்யப்பட்டான். மன்மோகன் சிங் ஆட்சியில் கலவரத்தை கட்டுப்படுத்த சுமார் 6,000 பேர்களை பொது பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்த போது, கூட்டணியிலிருந்த தி.மு.க. வாய் திறக்கவில்லை. அப்பொழுது தெரியாத மிருகத்தனமான சட்டம் தற்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா? ஆகவே நீலிக்கண்ணீர் வடிப்பதில் ஸ்டாலின் கில்லாடி என தெரிகிறது.
மெஹபூபாவின் அப்பா முப்தி முகமது கலீ உள்துறை அமைச்சாரக இருந்த போது, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த தனது மகள் ரூபியா சயீதை மீட்க, ஐந்து தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டார்கள். காஷ்மீரிலிருந்து ஹிந்துக்கள் பயங்கரவாதிகளால் அடித்து விரட்டப்பட்டார்கள். முப்தி முகமது சயீத்துடன் இருந்த அமைச்சர் ஆரீப் முகமது கான் சன்டே கார்டியன் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில், காஷ்மீரில் முப்தி பயங்கரவாதிகளுக்கு பாதகாப்புக் கொடுத்தார் என குறிப்பிட்டதை ஸ்டாலினுக்கு நினைவுப் படுத்தினால், காஷ்மீருக்கு ஆற்றிய பங்கு வெட்ட வெளிச்சமாகும். மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக முப்தி மெஹபூபா டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். மீன்டும் மத அடிப்படையில் காஷ்மீரில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தும் என மிரட்டும் தொனியில் பதிவு விட்டுள்ளது தேச பக்தியா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.
பரூக் அப்துல்லா, 2018-ல் உரியில் நடந்த கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘‘70 வருடங்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியவுக்குரிய பகுதி என பேசிக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அதை கைப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை கைப்பற்ற இந்தியா முயலுமானானல், பாகிஸ்தான் வலிமையற்ற நாடு என நினைக்க வேண்டாம்’’ என கூச்சலிட்ட கண்டு. அந்தப் பகுதி எனது தந்தைக்கு சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்றும் கூறியது, தேசப் பற்றா? உமர் அப்துல்லாவும் தனது தந்தைக்கு சற்றும் குறைந்தவரில்லை. அரசியல் சாஸன ஷரத்து 370 ரத்து செய்யப்பட்டது அரசியல் பூகம்பமாக வெடிக்கும். அது காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து விடும் என பிரிவினைக்கு ஆதரவாக உமர் பேசுவது தான் தேச பக்தியா?
ஷேக் அப்துல்லாவின் குடும்பமே, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த கூட்டம். இந்திய சுதந்திர சட்டத்திற்கு எதிராக, சுய நலத்தின் அடிப்படையில், நேரு செய்த தவறு அரசியல் சாஸன ஷரத்து 370, 1953 மே மாதம் டேட்லி ஸ்டீவனஸன் என்ற அமெரிக்கரை அப்துல்லா சந்தித்தார். இந்த அமெரிக்கர் இந்தியா பாகிஸ்தான் இரண்டையும் சமதூரத்தில் வைத்து பார்ப்பவர் சுதந்திரம் பெற்ற தனி பூமியாக காஷ்மீர் இருப்பதுதான் சரியானது என கூறியவர். இவரை அப்துல்லா சந்தித்த பின்னர், அதே ஆண்டு ஜூலை மாதம் 13ந் தேதியன்று தியாகிகள் நாள் கொண்டாட்டத்தில், பாகிஸ்தான் அல்லது இந்தியா என இரண்டில் எதற்கும் ஒரு கூடுதல் இணைப்பாக அவர்கள் தோளில் பயணிக்கும் நபராக இருக்க வேண்டிய கட்டாயம் எதுவும் எங்களுக்கு ( ஜம்மு காஷ்மீர் ) இல்லை. இந்த நிலை மாறுபட வேண்டும் என்று பேசினார் இது தான் தேச பற்றா? பச்சை பிரிவினைவாதமா ?
அப்துல்லாவும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் நல்ல நண்பர்கள். தனிப்பட்ட முறையில் நட்பை தக்க வைத்துக் கொண்டவர்கள். இதைப் பயன்படுத்தி, இரு தரப்பிலும் உள்ள காஷ்மீரை இணைத்து ஒரு கூட்டமைப்பு போன்ற நிலையை உருவாக்கிவிடலாம் என்ற அப்துல்லா விரும்பினார். பாகிஸ்தானில் நிலவிய அரசியல் சூழல் அதற்கு இடம் தரவில்லை. சூழல் நிலை மாறியிருந்தால், ஷேக் அப்துல்லாவின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். இந்த பிரிவினைவாதிகளின் வாரிசு தான் தேசப்பற்று மிகுந்தவராக ஸ்டாலின் கண்ணுக்கு தெரிகிறார். அப்துல்லா ஹஜ் சென்ற போது, கூடவே முஸ்லீம் நாடுகள் சிலவற்றுக்கும், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது, சீன அதிபர் சூயென் லாயையும் அப்துல்லா சந்தித்து பேசினார். பகை நாடான சீனாவின் அதிபரை வெளிநாடு ஒன்றில் அப்துல்லா சந்தித்தது, சீனா வரும்படி அப்துல்லாவை சூயென் லாய் அழைத்தது, போன்றவை அப்துல்லாவின் தேச பக்தி மீதான கேள்விக்குறி எனவே அவர் இந்தியா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு ஸ்டாலினுக்கு தெரியுமா என தெரியவில்லை. தெரிந்திருந்தால், தேச பக்தியை பற்றி அறிக்கை விட்டிக்க மாட்டார்.
வி.பி.சிங்கை தலைமேல் வைத்து ஆடுபவர் ஸ்டாலின். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, காஷ்மீர் மாநில ஆளுநராக மீன்டும் ஜக்மோகன் நியமிக்கப்பட்டார். ‘‘காஷ்மீரில் விஷச் செடிகளுக்கான விதைகள் தூவப்படுவதாக, பல முறை ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதி, தகவல் தெரிவித்தேன். இப்போது அந்த விதையெல்லாம் மரங்களாக, அடர்ந்த புதர்களாக பயமுறுத்தும் சூழலில், பொறுப்பு ஏற்க உள்ளேன்’’ என கூறிப்பிட்டது. அப்துல்லாக்களின் ஆட்சியில் நடந்த அவலங்கள் என்பதை, ஸ்டாலின் அறிக்கை விடுவதற்கு முன் அரசியல் விவகாரம் தெரிந்த சில மூத்த தலைவர்களின் ஆலோசனையின் பேரில் அறிக்கையை விடலாம். இல்லை
யெனில் மூக்கறுபட்டு நிற்பது யார்?