சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐ.டி.யு) நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான கவுன்சில் நிலைக்குழுவில், பாரதத்தை சேர்ந்த அப்ரஜிதா ஷர்மா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பது ஐ.நாவின் தகவல் தொடர்புக்கான சிறப்பு நிறுவனமாகும். கடந்த மார்ச் 21 முதல் மார்ச் 31 வரை ஜெனீவாவில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம், நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான நிலைக்குழுவின் துணைத் தலைவராக (ஐ.பி & டி.ஏ.எப்) இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதிச் சேவை அதிகாரியான அப்ரஜிதா ஷர்மா வை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கான கவுன்சில் நிலைக்குழுவின் துணைத் தலைவராகவும், 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளுக்கான தலைவராகவும் இருப்பார்.