ஒரு நாள் அரசபையில் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் அமைச்சர் சொன்னார். இந்த உலகத்தில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்தான்”.
அரசருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை.
அப்படியானால் என்னையும் என்கிறாயா?” என்றான் அரசர்.
அதற்கு ஆமாம்” என்றார் அமைச்சர்.
அப்படியானால் அதை நிரூபி பார்க்கலாம்” என்று கட்டளையிட்டான் அரசர்.
அதற்கு ஒப்புக் கொண்ட அமைச்சர், மறுநாள் காலையில் காவேரி நதிக்கரையில் மணலில் உட்கார்ந்து கயிற்றுக் கட்டில் பின்னத் தொடங்கினார். இந்த செய்தி அரசனின் காதுக்கு எட்டியது அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்கும் ஆவலில் அரசர் மந்திரிகளுடன் நதிக்கரைக்கு வந்தார்.
அமைச்சர் அரசரையும், மற்றவர்களையும் பார்த்த பின்பும் எதுவும் பேசவில்லை. அரசன் அருகில் வந்து அமைச்சரே! என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று வினவினார். அமைச்சர் அதற்கு பதில் சொல்லவில்லை. பிறகு ஒவ்வொரு துணை மந்திரியும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.
அமைச்சர் ஒரு ஓலையை எடுத்து, அதில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்” என்று தலைப்பு போட்டு, கீழே அரசர் பெயர் உட்பட மற்றவர் பெயர்களையும் எழுதி அவர்களிடம் கொடுத்தார். அந்தக் காகிதத்தை அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதை அரசரிடம் தந்தார்கள். அரசர் அதைப் படித்து பார்த்து கோபத்துடன் அமைச்சர் சபைக்கு வந்தவுடன் நாங்கள் எப்படிக் கண்ணில்லாதவர்கள் ஆவோம்?” என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் அமைதியாக அரசே நான் காவேரி நதிக்கரையில் அமர்ந்து கயிறுக் கட்டில் பின்னுவதைப் பார்த்தபிறகு கூட என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டீர்கள் அப்போழுது நீங்கள் எல்லாம் கண்ணில்லாதவர்கள் தான் என்றாகிறதல்லாவா? என்றான் அமைச்சர். இதில் நான் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனத்தை செய்திருந்தால் என்னை மன்னியுங்கள். இப்பொழுதாவது உலகில் அனைவரும் குருடர்கள் தான் என்று ஒப்புக்கொள்வீர்களல்லவா?”
(‘தினம் ஒரு கதை’ புத்தகத்திலிருந்து)