நரேந்திர மோடி ஒரு அசாதாரணமான நெருக்கடியைக் கையாண்டு கொண்டி௫க்கிறார். இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்தையும், மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்த அத்தகைய சூழ்நிலையை இதுவரை எந்த ஒரு பிரதமரும் எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வந்ததில்லை.
ஒரு குடும்ப உறுப்பினர் கடுமையாக நோய்வாய்ப்பட்டாலே நாம் கலங்குவோம்.. இங்கே, அவரது 130 கோடி மக்கள் ஆபத்தில் உள்ளனர் . ஊரடைப்பு (Lockdown) முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இராணுவத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் உளவுத்துறை தோல்வி என்று கூறுகிறார்கள். பொருளாதார பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப, கொரானா என்ற கட்டுக் கதையைக் கிளப்பியுள்ளார் என்றும் சொன்னார்கள்.. அனைவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்க முடியும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், 130 கோடி மக்களின் பொறுப்பை நலனுக்கு யார் பொறுப்பேற்க முன் வருவார்? இயலும்?. மோதி மட்டும் தானே அந்த பொறுப்பைச் சுமக்க வேண்டும். .
ஊரடைப்பு வெற்றிபெறவில்லை என்றால், அவர் அவர் மீது பழி. வெற்றி பெற்றால் பொருளாதாரம் பாதிக்கபட்டது என்று அவரை குறை கூறுவர். அவர் ஊரடைப்பிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்றால், அது பொருளாதாரத்தை பாதிக்கவில்லை என்றாலும், தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் வேட்டையாடப்படுவார்.
வேலையை நிறுத்த 130 கோடி மக்கள் கொண்ட தேசத்தை நீங்கள் அழைக்கிறீர்கள். ஏழைகளுக்கு உணவு இல்லாமல் போகும் ஆபத்து, பணக்காரர்கள் தங்கள் வருவாய் நின்றுவிட்டதோடு அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, நடுத்தர வர்க்கம் ‘நீங்கள் எங்களுக்கு நிதி உதவி செய்தது போதுமானதாக இல்லை.’ என்று குற்றம் சாட்டும். மேலும் பல வகையான விமர்சனங்கள் வைக்கப்படும்.
ஒரு 70 வயதான மனிதர் 130 கோடி மக்களின் சுமையையும் தாங்கிக்கொணடு, மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாமல், முணு முணுக்காமல், சாக்குகள சொல்லாமல் , மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறார்.
ஆம், அது அவருடைய பொறுப்பு தான். ஆனால் அவரும் மனிதர் தானே. அந்த அழுத்தம் இருக்கத்தானே செய்யும். ஆனால், இவை எல்லாவற்றையும் கடந்து, தேச நலன் என்ற, ஒற்றை எண்ணம் கொண்ட செறிவுடன் எடுக்கும் முடிவுகள், நம் பாரத நாட்டில் வரலாறு காணாத ஒரு ஈடு இணையற்ற செயல்.
அவர் ஒருபோதும் புகழை நோக்கி ஓடுவதில்லை.
ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் நெடுங்காலமாக புரையோடிப் போய் கிடைக்கும் பல முக்கிய சிக்கல்களைக் கையிலெடுத்துக் கொண்டு தீர்வு காண முயன்று கொண்டிருக்கிறார் அவர். சிலவற்றில் வெற்றியும் கண்டுள்ளார். தீர்க்க வேண்டியவை இன்னும் ஏராளம். கடக்க வேண்டிய தொலைவும் அதிகம். கொரோனா இப்போது ஒரு புதிய அபாயகரமான குறுக்கீடு..
அவர் நிலையில் நான் இருந்தால், இத்தகைய அச்சுறுத்தும் பிரச்சினைகளை கண்டு நான் என்னவாகி இருப்பேன் என்பதை உணர்ந்தேன். நான் அவரது பதவியை வகிக்க விரும்பவில்லை. நீங்கள்?
கருத்துக்களை முற்றிலுமாக என்னால் எழுத முடியவில்லை என்பதை நான் அறிவேன்; ஆனால், உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன். பெரும்பாலான இந்திய குடிமக்களின் சிந்தனையைத் தான் நான் எதிரொலிக்கிறேன் என்பது என் எண்ணம்.
அவரின், சுயநலமற்ற நடைமுறைக்கேற்ற முடிவுகளுக்கு நன்றி தெரிவிக்க நினைத்தேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நான் எனது நாட்டிற்கும் எனது பிரதமருக்கும் துணை நிற்கிறேன் ….
(கட்டுரையாசிரியர் அரு.துரை. கோபால் வங்கித் துறையில் , குறிப்பாக பல நாடுகளின் மத்திய வங்கிகளில் கணினிமயமாக்கும் திட்டங்களை நிறைவேற்றும் பணிகளில் நீண்ட அனுபவமும் திறனும் பெற்றவர் )
Reflects the thoughts of every person who loves India. Kudos to Mr Gopal.
Superb article sir. You have reflected the thoughts of every right thinking and patriotic Indian
ஒவ்வொரு உண்மை இந்தியனின் உள்ளக்குமுறலையும் தெள்ளத் தெளிவாக வெளிக் கொணர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி🙏