பிரதமர் மோடியையும், அவரது ஆட்சியையும் காங்., எம்.பி., ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சீன விவகாரம், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னை என அடுக்கடுக்காக புகார் கூறி வருகிறார். இந்நிலையில் ராகுலின் இந்நடவடிக்கையை மத்திய அமைச்சர் நக்வி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: ராகுல் எந்த வேலையையும் செய்வதில்லை. ஆனால் தொடர்ந்து கிளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழு கூட்டங்களில் அவர் இதுவரை பங்கேற்றதில்லை. எதிர்மறை நிறைந்த ஒருவர், அனைத்தையும் எதிர்மறையாகவே பார்ப்பார். இதனால் தான் அவர் மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வணிகம், விவசாயம், பெண்கள் உரிமைகள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களை அவர் பார்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.